Food Recipe: ஆரோக்கிய ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. பரங்கிக்காய் பக்கோடா செய்வது எப்படி..?

Squash Pakoda Recipe: ப்ரங்கிக்காயில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம். இது ஜீரணிக்கவும் மிகவும் எளிதானது. இந்தநிலையில், பரங்கிக்காயை கொண்டு பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Food Recipe: ஆரோக்கிய ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. பரங்கிக்காய் பக்கோடா செய்வது எப்படி..?

பரங்கிக்காய் பக்கோடா

Published: 

02 Apr 2025 16:33 PM

பூசணி வகையை சேர்ந்த பரங்கிக்காய் (Squash) எடுத்து கொள்வது உடலில் பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை தரும். பரங்கிக்காயில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், இதயம் மற்றும் மூளைக்கு ஆரோக்கியமான மோனோ- மற்றும் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களையும் (vitamins) வழங்குகிறது. இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம். இது ஜீரணிக்கவும் மிகவும் எளிதானது. இந்தநிலையில், பரங்கிக்காயை கொண்டு பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பரங்கிக்காய் பக்கோடா:

தேவையான பொருட்கள்

  •  பரங்கிக்காய் – 1 கப்
  • கடலை பருப்பு – 1 கப்
  • அரிசி மாவு – 1/4 கப்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • நறுக்கிய இஞ்சி – 1 துண்டு
  • பெருங்காயம் – சிறு துண்டு
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • எண்ணெய் – தேவையான அளவு

பரங்கிக்காய் பக்கோடா  செய்வது எப்படி..?

  1. முதலில் கடையில் வாங்கி வந்த பரங்கிக்காயை நன்றாக கழுவி தோல் சீவி எடுத்துக்கொள்ளவும்.
  2. அதன்பிறகு, கேரட்டை எப்படி பொரியலுக்கு துருவுவோமோ அதே போல் பரங்கிக்காயையும் துருவி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. இப்போது கையை கொண்டு பிசையும் அளவிற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள துருவிய பரங்கிக்காய் போடவும்.
  4. அதனுடன் மேலே குறிப்பிட்ட அளவிலான கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. தொடர்ந்து, அதே கலவையில் தேவைக்கேற்ப மிளகாய் தூள், உப்பு, பச்சை மிளகாய், சிறு துண்டு இஞ்சி, ஒரு கொத்து கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றஒ சேர்த்து தண்ணி விடாமல் மீண்டும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  6. இப்போது அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் வைக்கவும்.
  7. எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போட்டு வேக விட்டு எடுக்கவும்.
  8. அவ்வளவுதான் நன்கு பொரித்து சிவந்து மொறு மொறு ஆனதும் எடுத்தால் சுவையான பரங்கிகாய் பக்கோடா ரெடி.

பரங்கிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்:

  • பரங்கிக்காய் என்பது என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்களால் நிரம்பிய ஊட்டச்சத்து நிறைந்த செயல்பாட்டு உணவாகும். இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற நிலைமைகளை நிர்வகிப்பதில் உதவுகிறது.
  • பூசணி இனங்களில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் தடுப்பு குணங்கள் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சில குக்குர்பிடசின்கள், குறிப்பாக குக்குர்பிடசின் பி, மார்பக, நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.