Kitchen Hacks: சமையலறையில் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த வேண்டுமா..? எளிய குறிப்புகள்..!

Speed Up Cooking: சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், வேலையை எளிதாக்கவும் சில பயனுள்ள குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பருப்பு வேகவைக்கும் போது பிரஷர் குக்கரில் ஒரு சிறிய கிண்ணத்தை வைப்பதன் மூலம் அழுக்குத் தடுக்கலாம். உப்பு ஜாடியில் அரிசி சேர்ப்பதால் ஈரப்பதம் தடுக்கப்படும். சுண்டலை விரைவாக வேகவைக்க உப்பு மற்றும் ஐஸ் கட்டி பயன்படுத்தலாம். பூண்டை எளிதாக உரிக்க சூடான நீரில் ஊற வைக்கலாம். இந்த எளிய குறிப்புகள் உங்கள் சமையலறை வேலையை எளிதாக்கும்.

Kitchen Hacks: சமையலறையில் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த வேண்டுமா..? எளிய குறிப்புகள்..!

சமையலறை குறிப்புகள்

Published: 

14 Apr 2025 22:25 PM

வீட்டில் சமையலறையில்தான் (Kitchen) எப்போதும் வேலை அதிகமாக இருக்கும். மேலும், இது நிறைய நேரத்தை நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளும். சிலர் சமைப்பது பிடிக்கும். அதுவே, பாத்திரம் கழுவ வேண்டும் என்று நினைத்தால் பலரும் பயந்து ஒதுங்குவார்கள். அந்தவகையில், உங்கள் வேலையை எளிதாகவும் குறைந்த நேரத்திலும் முடிக்க உதவும் சில சமையலறை ஹேக்குகளை (Kitchen Hacks) இங்கே உங்களுக்கு சொல்லுகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, எளிதாக சில விஷயங்களை மேற்கொள்ளலாம். கிட்செனில் சில எளிய டிப்ஸ் இதோ..

பருப்பு வேகவைத்தல்:

பருப்பு வேகவைக்கும்போது பிரஷர் குக்கரின் மூடியிலிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறி, அதைச் சுற்றியுள்ள அனைத்தும் அழுக்காகிவிடும். இதை கழுவும்போது படாதப்பாடு பட வேண்டியதாக இருக்கும். இது மாதிரி நடக்கக்கூடாது என்றால், பிரஷர் குக்கரில் பருப்பை கொதிக்க வைக்கும்போது, ​​ஒரு சிறிய ஸ்டீல் கிண்ணத்தை அதில் வைக்கவும். இப்படிச் செய்வதால் பருப்பு கொதிக்காமல், குக்கரின் விசிலிலிருந்து நீராவி மட்டுமே வெளியேறும்.

உப்பு ஜாடியில் தண்ணீர் கோர்த்தல்:

உப்பு ஜாடிக்குள் ஈரப்பதம் நுழையும் போது, ​​அனைத்து உப்பும் ஈரமாகிவிடும், இதனால் அதை ஜாடியிலிருந்து சரியாக வெளியே எடுக்க முடியாது. அதன்படி, உப்பில் உள்ள ஈரப்பதத்தை நீக்க வேண்டும் என்றால், உப்பு ஜாடிக்குள் இருக்கும் உப்பு மீது சில அரிசிகளை போடவும். அப்போது, அரிசி தானியங்கள் ஈரப்பதத்தை உறிஞ்சி, உப்புகளை அழுத்தி வெளியேற்றும். இதன்பிறகு, நீங்கள் எளிதாக உப்புகளை வெளியே எடுத்து பயன்படுத்தலாம்.

சுண்டல் வேகவைத்தல்:

ஒரு இரவுக்கு முன்பு சுண்டல் போன்றவற்றை ஊறவைக்க மறந்துவிட்டால், கவலையை விடுங்கள். இதை செய்தால் சூப்பராக உடனுக்குடன் வேகவைக்கலாம். முதலில் சுண்டல் உள்ளிட்ட காய்ந்த பருப்பு வகைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். அதன் பிறகு, பிரஷர் குக்கரில் தண்ணீரை ஊற்றி, அதில் 1 ஸ்பூன் உப்பு சேர்க்கவும். பின்னர் அதில் ஒரு விசில் வைத்த பிறகு, அது குளிர்ச்சியடையும் வரை காத்திருக்கவும்.

பின்னர், அதில் ஒரு கப் ஜஸ் கட்டிகளை கொட்டவும். உப்பு மற்றும் ஐஸ் கட்டி கலவை சுண்டல் போன்றவற்றை விரைவாக கெட்டி தன்மையை கரைக்க உதவும். இதற்குப் பிறகு, மீண்டும் குக்கரில் விசில் வைத்து, பின்னர் கேஸை மெதுவாக்கி 5-7 நிமிடங்கள் சுண்டலை எளிதாக சமைக்கலாம்.

பூண்டு உரித்தல்:

பூண்டை எளிதில் உரிக்க, பூண்டு பற்களை சிறிது நேரம் சூடான நீரில் போடவும். சிறிது நேரம் கழித்து, பூண்டை உரிக்கும் முன், அதன் மேல் பகுதிய வெட்டினால் எளிதாக மேல் தோல் பகுதியை கஷ்டப்படாமல் உரிக்கலாம்.