மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
Scientists Reveal 'Olo': மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நிறம் எப்படி இருக்கும் விஞ்ஞானிகள் விவரித்த விதம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மனித கண்களுக்கு புலப்படாத எத்தனையோ அற்புத விஷயங்கள் இந்த உலகத்தில் உள்ளது என்பதை இந்த கண்டுபிடிப்பு நமக்கு உணர்த்துகிறது.

மாதிரி புகைப்படம்
மனிதர்கள் இதுவரை காணாத ஒரு புதிய நிறம் (Colour) தற்போது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓலோ (Olo) என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறம், மனிதக் கண்களுக்கு இயற்கையாகத் தெரியாது. இந்த கண்டுபிடிப்பு குறித்து கடந்த ஏப்ரல் 18 , 2025 அன்று சைன்ஸ் அட்வான்சஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஓலோ நிறத்தை உலகத்தில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பார்த்துள்ளனர். தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்த விஞ்ஞானிகள், ”அது பிகாகோ புளூ அல்லது டீல் (Teal) நிறத்தை போன்றதாக இருந்தது எனவும் ஆனால், அதனுடைய நிறம் சாதாரண நிறங்களை விட மிகப்பெரும் மாறுபாட்டுடனும் இருந்ததாக தெரிவித்தனர். இந்த நிறத்தை பார்க்க, விஞ்ஞானிகள் கண்ணின் ரெட்டினாவை லேசர் உதவியுடன் நேரடியாகத் தாக்கி உருவாக்க வேண்டி இருந்தது. இதன் மூலம், கண்களின் இயல்பான வரம்புகளை மீறி நிறங்களை உணர்த்த முடிந்தது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வின்ஞானி ரென் என்ஜி இதுகுறித்து தெரிவித்ததாவது, நாங்கள் ஆரம்பத்தில் இதுவொரு சாதாரண நிறமல்ல, புதியதாக இருக்கும் என எதிர்பார்த்தோம். நினைத்தது போலவே எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. என்றார்.
இது ஒரு ஸ்கிரீனில் பார்க்கக்கூடிய நிறம் அல்ல. உண்மையில் அந்த அனுபவம் எங்களுக்கே வியப்பூட்டியது. ஒலோவை பார்த்த உணர்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாது,” என அஸ்டின் ரூர்டா என்ற விஞ்ஞானி தெரிவித்தார்.
மனிதக் கண்கள் நிறங்களை எப்படி உணர்கின்றன?
மனிதக் கண்களில் உள்ள கான்ஸ் (cones) எனும் செல்களால் மூன்று விதமான நிற அலைகளை உணர முடியும். அதில் Long cones (நீள அலை) – சிவப்பு, Medium cones (நடுத்தர அலை) – பச்சை, Short cones (குறுகிய அலை) – நீலம் என 3 நிற அலைகளை உணர முடியும். இவற்றில் M-cones இயற்கை ஒளியால் நன்கு வெளிப்படுவதில்லை. அதனால், அந்தக் குறிப்பிட்ட M-cones மீது நேரடியாக லேசர் ஒளி விடப்பட்டு அந்த ‘Olo’ நிறத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண வாழ்க்கையில் நாம் இதைப் பார்க்க முடியுமா?
இந்த நிறம் எந்த ஸ்மார்ட் ஃபோனிலும், டிவி-யிலும், VR டெக்னாலஜியிலும் உடனடியாகக் காண முடியாது. இதனை காணும் ஆற்றல் மனித பார்வைக்கு இயற்கையாகவே கிடையாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஓலோ எனப்படும் இந்த புதிய நிறம், விஞ்ஞான ரீதியாக மனித பார்வையின் எல்லைகளை தாண்டிய ஒரு அதிசயமான பார்க்கப்படுகிறது. இது மனித கண்களால் இயற்கையாக காண முடியாத புதிய அனுபவம் என்பது விஞ்ஞானிகளின் பேச்சு நமக்கு உணர்த்துகிறது. இதனால், நிறங்கள் குறித்த நம் புரிதல் முற்றிலும் மாற்றியிருக்கிறது. நமது கண்களுக்கு புலப்படாத பல்வேறு விஷயங்கள் இந்த உலகத்தில் உள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.