மது, சிகரெட் பழக்கமில்லாதவர்களுக்கு கிட்னி பிரச்னை வருவது ஏன்? காரணங்கள் இதோ!
kidney Protection Tips : சிறுநீரகங்கள் உடலின் முக்கிய உறுப்பு. மது, புகை பழக்கமில்லாதவர்களுக்கு கிட்னி பிரச்னை வரலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன காரணங்கள் என்பதையும், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமென்பதையும் விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரகம் (மாதிரிப்படம்)
உடலில் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுமே மிக முக்கியமானது. ஒவ்வொரு உள்ளுறுப்பும் ஒவ்வொரு வகையான வேலைகளை செய்கின்றன. அந்த வகையில் உள்ளுறுப்புகளில் மிக முக்கியமானது என்னவென்றால் சிறுநீரகம் (Kidney). கிட்னி என்பது நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, நச்சுகளை நீக்குகிறது மற்றும் உடலில் உள்ள நீர் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்கிறது. இவ்வளவு முக்கிய உறுப்பான கிட்னி சிலருக்கு செயலிழந்து விடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மதுவும், புகையும்தான். ஆனால் மது மற்றும் சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்குக் கூட சிறுநீரகங்கள் சேதமடைகின்றன. இது ஏன் நடக்கிறது தெரியுமா? அதன் பின்னணியில் உள்ள காரணங்களையும், தடுப்பு முறைகளையும் tv9hindi கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களை பார்க்கலாம்.
குறைவாக தண்ணீர் குடித்தல்
உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற போதுமான அளவு தண்ணீர் அவசியம். குறைவாக தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்கள் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றன, மேலும் படிப்படியாக அவர்களின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் படிப்படியாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
அதிக உப்பு சாப்பிடுதல்
தினசரி உணவில் தேவைக்கு அதிகமாக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களின் சுமையை அதிகரிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பாஸ்ட்புட் சாப்பிடுவதும் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிக வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது
தலைவலி, உடல் வலி அல்லது வேறு எந்த பிரச்சனைக்கும் அதிகப்படியான வலி நிவாரணிகளை உட்கொள்வது சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது.
லைப்ஸ்டைல் சிக்கல்கள்
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், போதுமான தூக்கம் வராதவர்கள் போன்றவர்களுக்கு சிறுநீரகங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன்
அதிக புரத உணவை எடுத்துக்கொள்வது
தேவையானதை விட அதிக புரதத்தை உட்கொள்வது சிறுநீரகங்களில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக அதிக சிவப்பு இறைச்சி மற்றும் உணவு சப்ளிமெண்ட்களை உட்கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தவிர, குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய் இருந்தால், எதிர்கால சந்ததியினருக்கும் ஆபத்து ஏற்படலாம். அத்தகையவர்கள் தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
- நாள் முழுவதும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
- உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
- இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
- தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணிகளையும்,
- மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)