Food Recipes: சுவையில் அதிரி புதிரி..! பேபி கார்ன் வேர்க்கடலை கார குழம்பு செய்வது எப்படி?
Peanut and Baby Corn Curry Recipe: வேர்க்கடலையை மக்கள் வேகவைத்து தண்ணீரில் ஊறவைத்து, வறுத்து பல வகைகளில் சாப்பிடுகின்றனர். அந்தவகையில், வேர்க்கடலை கொண்டு இன்று சுவையான பேபி கார்ன் வேர்க்கடலை கார குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பேபி கார்ன் வேர்க்கடலை கார குழம்பு Image Source: Freepik
விலையுயர்ந்த ட்ரை ப்ரூட்களை கம்பேர் செய்யும்போது வேர்க்கடலை (Peanuts) மலிவான விலையில் கிடைக்கக்கூடியாக அதிக சத்துகள் கொண்டது. பெரும்பாலான மக்கள் இதை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் ஆரோக்கியத்திற்காக இதை எடுத்துக்கொள்வார்கள். வேர்க்கடலை பல வழிகளில் உட்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். இதில் புரதம் (Protein), ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. அதன்படி வேர்க்கடலையை மக்கள் வேகவைத்து தண்ணீரில் ஊறவைத்து, வறுத்து பல வகைகளில் சாப்பிடுகின்றனர். அந்தவகையில், வேர்க்கடலை கொண்டு இன்று சுவையான பேபி கார்ன் வேர்க்கடலை கார குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வேர்க்கடலை கார குழம்பு
தேவையான பொருட்கள்:
- பேபி கார்ன் – 10
- வேர்க்கடலை – ஒரு கையளவு
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- பூண்டு – 4 பல்
- புளி – பெரிய நெல்லிக்காய் சைஸ் அளவு
- பச்சைமிளகாய் – 2
- சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- கொத்தமல்லி – தேவையான அளவு
- அரிசி ஊற வைத்த நீர் – 1 கப்
- தேங்காய்ப்பால் – 1 கப்
பேபி கார்ன் வேர்க்கடலை கார குழம்பு செய்வது எப்படி..?
- பேபி கார்ன் வேர்க்கடலை கார குழம்பு செய்வதற்கு தேவையான அளவிலான வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் வெட்டி எடுத்து கொள்ளவும்.
- அடுத்ததாக, தக்காளியை பொடி பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அரை முடி தேங்காய் உடைத்து அரைத்து தேங்காய்பாலாக அரை கப் எடுத்து கொள்ளவும்.
- இப்போது பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியுடன் சாம்பார் பொடியை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான புளியை அரிசி ஊற வைத்த தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
- இப்போது பேபி கார்னை 4 துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைக்கவும். கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு எப்போதும் போல் தாளித்து கொள்ளவும்.
- அதனுடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை வதங்க வதங்க ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
- அடுத்ததாக, வேர்க்கடலை மற்றும் 4 ஆக வெட்டிய பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இப்போது, அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- மீதமுள்ள எல்லாவற்றையும் கடாயில் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- தண்ணீர் வற்றி குழம்பு கெட்டியாகும் வரை காத்திருந்து எண்ணெய் மேலே மிதந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறினால் போதும். குழம்பு தயார். இப்போது அடுப்பை அணைக்க 5 நிமிடத்திற்கு முன் பொடியாக நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் பேபி கார்ன் வேர்க்கடலை கார குழம்பு ரெடி.