மதுரை அருகே மினி குற்றாலம் – குட்லாம்பட்டி அருவி தெரியுமா?
Madurai’s Mini Courtallam: மதுரை அருகே குறைந்த செலவில் ஒரு நாள் சுற்றுலா சென்று வர விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ளது. வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள இந்த அருவியானது மதுரையின் மினி குற்றாலம் என அருவி என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

மதுரை (Madurai) மற்றும் அதன் சுற்று வட்டாங்களில் இருப்பவர்களுக்கு சுற்றுலா செல்ல பல சுற்றுல தளங்கள் இருக்கின்றன. அதிகபட்சம் 200 கி.மீ தூரத்தில் ஒரு நாளில் சென்று வர விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் பல இடங்கள் இருக்கின்றன. சிறுமைல, வைகை அணை, மேகமலை, கொடைக்கானல் (Kodaikanal), பழமுதிர்சோலை, குமுளி என அந்த பட்டியல் மிக நீளம். கோடைவிடுமுறையில் குறைவான பட்ஜெட்டில் ஒரே நாளில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களாக இருக்கின்றன. அந்த வகையில் மதுரைக்கு அருகே அருவி ஒன்று இருப்பது தெரியுமா? மதுரை வாசிகளே பலரும் அறியாத வகையில் இந்த அருவி இருக்கிறது. அதிக பட்சம் ஒரு மணி நேரத்தில் அந்த அருவியை சென்றடைய முடியும். அந்த அருவி வேறு எதுவும் இல்லை. வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாம்பட்டி (Kutladampatti) அருவிதான்.
என்ன ஸ்பெஷல்?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இந்த குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ளது. மதுரையின் குற்றாலம் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. மற்ற சுற்றுலா தளங்களைக் காட்டிலும் இங்கே கூட்டம் குறைவாகவே இருக்கும். குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மூலிகைகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. அதன் வழியாக விழும் இந்த அருவியில் குளித்தால், அது உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது என நம்பப்படுகிறது. மேலும் 2 கி.மீ மலையேற வேண்டும் என்பதால் மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஏற்ற இடமாக கருதப்படுகிறது. இயற்கை அழகை ரசித்தபடி ஒரு நாள் குடும்பத்துடன் சென்று வரலாம். முடிந்தால் வீட்டில் சமைத்து எடுத்துக்கொண்டு போய் குளித்துவிட்டு அங்கேயே இயற்கையை ரசித்தபடி சாப்பிட்டு வரலாம்.
குட்லாடம்பட்டிக்கு எப்படி செல்வது?
மதுரையில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. மதுரையில் இருந்து வாடிப்பட்டி வழியாக இந்த இடத்தை அடையலாம். குட்லாடம்பட்டி கிராமத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. பேருந்தில் வர விரும்புபவர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் வாடிப்பட்டி வந்து அங்கிருந்து குட்லாடம்பட்டி வரலாம்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு இந்த அருவிதான் மினி குற்றாலமாக கருதப்படுகிறது. மேலும் ஒரு நாள் பயணத்தில் அதிக செலவில்லாமல் சென்று வர விரும்புபவர்கள் இங்கே வந்து செல்லலாம். மேலும் நேரமிருந்தால் அருகில் உள்ள சிறுமலைக்கும் சென்று வரலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுமலை மினி கொடைக்கானலாக கருதப்படுகிறது. நண்பர்களுடன் மலைப் பாதையில் ஒரு லாங் டிரைவ் சென்று வர விரும்புபவர்களுக்கு இந்த பயணம் ஏற்றது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)