Kitchen Sink Cleaning Tips: சமையலறை சிங்க்கில் அடிக்கடி அடைப்பு பிரச்சனையா..? இதை செய்தால் ஆல் கிளியர்!
Kitchen Hacks: சாப்பிட்டு மீதம் உள்ள பொருட்கள் சமையலறை தொட்டில் தண்ணீர் வெளியேறும் துளைகளுக்குள் தங்கி விடும். அப்படி இல்லையென்றால், அந்த மீதமுள்ள சாப்பாட்டு துகள்கள் தண்ணீர் வெளியேறும் வடிகாலில் சிக்கிக்கொள்வதாலோ அல்லது அடைத்துக்கொள்வதாலோ அழுக்கு தண்ணீர்கள் வெளியேறுவதைத் தடுக்கிறது.

சமையலறையில் வேலை செய்யும் போது ஏதாவது ஒரு விஷயங்கள் நம்மை கோபமும், எரிச்சலும் அடைய செய்யும். அதில் முக்கியமானது சமையலறை தொட்டியில் (சிங்க்) (Kitchen Sink) தண்ணீர் தேங்குவதுதான். இது பெரும்பாலானவர்களுக்கு அதிக கடுப்புகளை ஏற்படுத்தும். சாப்பிட்டு மீதம் உள்ள பொருட்கள் சமையலறை தொட்டில் தண்ணீர் வெளியேறும் துளைகளுக்குள் தங்கி விடும். அப்படி இல்லையென்றால், அந்த மீதமுள்ள சாப்பாட்டு துகள்கள் தண்ணீர் வெளியேறும் வடிகாலில் சிக்கிக்கொள்வதாலோ அல்லது அடைத்துக்கொள்வதாலோ அழுக்கு தண்ணீர்கள் வெளியேறுவதைத் தடுக்கிறது. இதனால், தண்ணீர் தேங்குவது மட்டுமல்லாமல், சமையலறை (Kitchen) முழுவதும் துர்நாற்றம் பரவ தொடங்கும்.
இதுபோன்ற பிரச்சனைகளில் நீங்கள் அடிக்கடி சிக்கி கொள்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. இன்று நாங்கள் உங்களுக்கு சில எளிய குறிப்புகளைச் சொல்லப் போகிறோம், அதன் உதவியுடன் நீங்கள் சமையலறை தொட்டியில் தேங்கி நிற்கும் தண்ணீரை எளிதாக வெளியேற்றலாம்.
எப்படி சுத்தம் செய்வது..?
சமையலறை சிங்க்கில் தண்ணீர் தேங்கினால், முதல் வேலையாக தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து சிங்க்கில் ஊற்றவும். பின்னர் அதில் சிறிது பாத்திரம் கழுவும் டிஷ்வாஷ் சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் முழு சிங்க்கையும் மீண்டும் சூடான நீரில் நன்கு கழுவவும். இது இன்னும் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றவில்லை என்றால், நீங்கள் பேக்கிங் சோடா மற்றும் வினிகரைப் பயன்படுத்தலாம்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்:
சிங்கை சுத்தம் செய்ய அரை கப் பேக்கிங் சோடாவை சிங்க்கில் போட வேண்டும். அதன் பிறகு அரை கப் வினிகரை அதில் ஊற்றவும். இந்தக் கலவை மூலம் நுரை வர ஆரம்பித்ததும், சிறிது நேரம் அப்படியே விடவும். சிறிது நேரம் கழித்து, சூடான கொதிக்கும் நீரை சிங்கில் ஊற்றவும். இதன் மூலம் உங்கள் முழு சிங்க்கும் சுத்தமாகி, தண்ணீர் எளிதாக வெளியேற தொடங்கும்.
உப்பு:
சிங்கை சுத்தம் செய்ய வீட்டில் இருக்கும் உப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான சுத்தப்படுத்தியாகும். முதல் உப்பை நீங்கள் சிங்கில் கொட்டி சிறிது நேரம் விட்டுவிட்டு, பின்னர் முழு சிங்க்கையும் சூடான நீரில் கழுவவும். நீங்கள் ஒரு பிளம்பிங் கம்பியையும் பயன்படுத்தலாம். அதை வடிகாலுக்கு மெதுவாக செலுத்தி, சுழற்றி எடுக்கவும். இதைச் செய்வதன்மூலம், சிங்க் வடிகாலில் இருக்கும் அழுக்கு துகள்கள் வெளியேறும்.
இந்த விஷயம் முக்கியமானது..
- உங்கள் சிங்க்கில் தேங்கி நிற்கும் நீர் மற்றும் துர்நாற்றத்தை ஒழித்துக்கட்ட விரும்பினால். ஒவ்வொரு நாளும் உங்கள் தொட்டியை தவறாமல் சுத்தம் செய்து, பெரிய உணவு துகள்களை கைகளாலோ அல்லது வேறு ஏதேனும் பொருளை கொண்டு எடுத்து குப்பை தொட்டியில் போடவும்.
- பல முறை முயற்சித்த பிறகும் தண்ணீர் சிங்க்கிலிருந்து வெளியேறவில்லை என்றால், நீங்கள் ஒரு தொழில்முறை பிளம்பரை அழைத்து சிங்க் மற்றும் வடிகால் குழாயில் கழட்டி ஏதேனும் சிக்கி இருந்தால் அவற்றை வெளியே எடுக்கலாம்.