Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Milk Preservation Tips: கோடையில் பால் வேகமாக கெட்டு விடுகிறதா..? தடுக்க எளிய டிப்ஸ் இதோ..!

Keep Milk Fresh Longer: கோடை காலத்தில் பால் விரைவில் கெட்டுப்போவதைத் தடுக்க, சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். பால் கொதித்தவுடன் உடனே குளிர்விக்காமல், சிறிது நேரம் ஆற விட வேண்டும். கல் உப்பு சேர்த்தல், பாலில் ஐஸ் கட்டிகள் போடுதல் போன்ற முறைகளும் பாலின் ஆயுளை நீட்டிக்கும். பாத்திரம் சுத்தமாக இருப்பது அவசியம். துளசி அல்லது புதினா இலைகள் சேர்ப்பதும் பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும்.

Milk Preservation Tips: கோடையில் பால் வேகமாக கெட்டு விடுகிறதா..? தடுக்க எளிய டிப்ஸ் இதோ..!
கோடையில் பால் கெட்டுப்போவதை தடுக்கும் முறைImage Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Apr 2025 19:29 PM

கோடைக்காலம் (Summer) கிட்டத்தட்ட தொடங்கி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த காலத்தில் உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது மிக மிக முக்கியம். இதற்காக பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் எடுத்துகொள்வது நல்லது. இத்தகைய வெயில் காலத்தில் நமக்கு மிகப்பெரிய தொல்லையாக இருப்பது உணவு பொருட்கள் (Foods) வேகமாக கெட்டு போவதுதான். சமைக்கப்பட்ட காய்கறிகள், பருப்பு வகைகள் மதிய நேரத்தில் சமைத்திருந்தாலும், இரவு நேரத்திற்குள் வேகமாக கெட்டுபோய்விடும். அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி இருக்காது. இதனால் தினசரி சமைத்த பொருட்களை கீழே கொட்டு சூழல் நிலவும். இதே நிலைமைதான் பாலுக்கும். கோடை காலத்தில் பால் (Milk) வேகமாக கெட்டு போகிறது என்றால், அதனை தடுக்கும் சில குறிப்புகளை இங்கே சொல்கிறோம்.

உடனே குளிர்விக்க வேண்டாம்:

அடுப்பில் வைத்து பால் உடனடியாக சூடானதும் நன்றாக கொதித்து இறக்கிவிடுவோம். அதன்பிறகு, பால் முதலில் தனியாக வைத்து குளிர்விக்க விடுங்கள். சூடான பாலை உடனடியாகவோ அல்லது நேரடியாக குளிர்விக்க குளிர்சாதன பெட்டியில் வைக்கின்றனர். இதனால், திடீர் வெப்பநிலை மாற்றத்தால் பால் கெட்டுப்போக தொடங்கும்.

உப்பு சேர்த்தல்:

பால் கெட்டுப்போகாமல் இருக்க உப்பு ஒரு சிறந்த தீர்வை தரும். பால் கொதித்ததும் அதில் சிறிதளவு கல் உப்பு சேர்க்கலாம். இதன் காரணமாக, பாலில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடனடியாக செயல்படாது. நீண்ட நேரம் செயல்படாமல் தடுக்கும். இதையடுத்து, பால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் தடுக்கலாம்.

ஐஸ் கட்டிகள்:

உங்கள் வீட்டில் குளிர்சாதன பெட்டி இல்லை என்றால், அல்லது சூடாக்க நேரம் இல்லை என்றால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். பக்கத்து வீடு அல்லது கடைகளில் சில ஐஸ் கட்டிகளை வாங்கி பாலில் நேரடியாக போடுங்கள். பால் சூடாக இருக்கும்போது ஐஸ் கட்டிகளை போட வேண்டாம். இதன் மூலம் பால் உடனடியாக குளிர்ந்து இன்னும் சில மணி நேரம் பால் கெட்டுப்போகாமல் தடுக்கும்.

உடனே மூட வேண்டாம்:

நன்றாக கொதித்த பால் முழுவதும் சூடு ஆறிய பின்னரே, அதை மூடி வைப்பது நல்லது. மூடிய பிறகு குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். சூடான பாலுடன் தட்டை போட்டு மூடுவதால், அதன் மேல் ஏற்படும் நீராவியும், வெப்பமும் இணைந்து பாலை கெட்டுப்போக செய்யலாம்.

துளசி மற்றும் புதினா:

பால் நன்றாக கொதித்தபிறகு, பாலின் மீது துளசி அல்லது புதினா இலைகளை சேர்க்கலாம். இது ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. மேலும், இவை விரைவாக கெட்டுப்போவதை தடுக்கும்.

பாத்திர சுத்தம்:

பால் சூடாக்கும்போதும் அல்லது ஊற்றி வைக்கும்போது அதை பயன்படுத்தப்படும் பாத்திரம் 100 சதவீதம் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். பழைய உணவு மிச்சம் அல்லது சற்று ஈரமான பாத்திரம் இருந்தால் பாலை வேகமாக கெட்டுப்போக செய்யும்.

 

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...