Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா – அவரே பகிர்ந்த சீக்ரெட்!

Jyotika’s Fitness Journey: நடிகை ஜோதிகா கடந்த 3 மாதங்களில் 9 கிலோ எடை குறைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடிகை வித்யா பாலன் அறிமுகம் செய்து வைத்த சென்னையைச் சேர்ந்த அமுரா ஹெல்த் டீம் வழிகாட்டியதாலும், தான் இந்த மாற்றத்தை அடைய முடிந்ததாக கூறியுள்ளார்.

3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா – அவரே பகிர்ந்த சீக்ரெட்!
நடிகை ஜோதிகா
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 29 Apr 2025 21:57 PM

நடிகை ஜோதிகா (Jyothika) தமிழில் கடைசியாக தமிழில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரா.சரவணன் இயக்கத்தில் உடன் பிறப்பே படத்தில் நடித்திருந்தார். இது அவரது 50வது படமாகும்.அதன் பிறகு கிட்டத்தட்ட 4 வருடங்களாக தமிழில் நடிக்கவில்லை. மலையாளத்தில் மம்மூட்டி (Mammootty) ஜோடியாக காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார்.தற்போது ஹிந்தியில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். மற்றொரு பக்கம் தயாரிப்பாளராக தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரிப்பில் ரெட்ரோ (Retro) படம் வருகிற மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், தான் எடை குறைக்க வழிகாட்டிய நடிகை வித்யா பாலனுக்கும், சென்னையைச் சேர்ந்த நியூட்ரிஷன் குழுவான அமுரா ஹெல்த் டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மூன்று மாதத்தில் 9 கிலோ எடை குறைத்த ஜோதிகா

 

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

அந்தப் பதிவில் ஜோதிகா, எனது எடை குறைப்பு பயணத்தில் பல தடைகளும், பல முயற்சிகளும் இருந்தாலும், அமுரா என்னை மீண்டும் எனது உண்மை நிலையை உணர்வதற்கு காரணமாக  அமைந்தது. மூன்று மாதங்களில் 9 கிலோ குறைத்ததற்கு நான் அமுராவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் வித்யா பாலன் அளித்த பேட்டியில் அவர் கூறிய அமுரா ஹெல்த் டீம் எனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதற்கு முன் கடுமையான உடற்பயிற்சி, பல்வேறு டயட் முறைகள் உள்ளிட்ட பல முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் அமுரா டீம் மூலம் எனது குடலின் செயல்பாடு, செரிமானம், அழற்சி ஏற்படுத்தக் கூடிய உணவுகள் (inflammatory foods), மற்றும் உணவு சமநிலையைப் பற்றி தெரிந்துகொண்டேன் என கூறியுள்ளார்.

பெண்களுக்கு வலிமை மிக முக்கியம்

 

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

இது மட்டும் அல்லாமல், ஜோதிகா தனது பயிற்சியாளர் மகேஷ் பற்றியும் நன்றியுடன் கூறியுள்ளார். “வலிமை மிக முக்கியமானது, குறிப்பாக பெண்களுக்கு. எடை குறைப்பு மட்டும் அல்லாமல், உடல் வலிமையைப் பெறவும் கவனம் செலுத்த வேண்டும். இது தான் அவர்களுக்கு சுயமரியாதை மற்றும் சுயநம்பிக்கை கிடைப்பதற்கான அடிப்படை” என கூறியுள்ளார்.

வித்யா பாலனின் டயட்

இது தொடர்பாக, 2024 அக்டோபரில் நடிகை வித்யா பாலனும் உடற்பயிற்சி இல்லாமல், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாக தன் எடையை குறைத்ததாக தெரிவித்திருந்தார். தன்னுடைய உடலை பற்றிய விமர்சனங்களை எதிர்கொண்டு, தற்போது எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

 

கோடையில் அதிகரிக்கும் டைஃபாய்டு - மலேரியா! அறிகுள் என்ன?
கோடையில் அதிகரிக்கும் டைஃபாய்டு - மலேரியா! அறிகுள் என்ன?...
காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சம்பவம்
காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சம்பவம்...
பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!
பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!...
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!...
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!...
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!...
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?...
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்...
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்...
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!...