Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: வீட்டிற்குள் ஈர துணிகளை உலர்த்துகிறீர்களா? இவ்வளவு ஆபத்து இருக்கு..!

Indoor Clothes Drying: தேசிய ஆஸ்பெர்கில்லோசிஸ் மையத்தின் பேராசிரியர் டேவிட் டென்னிங் மற்றும் அவரது முழுவினர் உட்பட மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், துவைத்த துணிகளை உள்ளே உலர்த்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

Health Tips: வீட்டிற்குள் ஈர துணிகளை உலர்த்துகிறீர்களா? இவ்வளவு ஆபத்து இருக்கு..!
வீட்டிற்குள் துணி காய வைத்தல்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Mar 2025 09:20 AM

விரைவில் கோடைக்காலம் (Summer) வர இருந்தாலும், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. வானிலை மோசமாக இருக்கும்போது, ​​மக்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே தாங்கள் துவைத்த துணிகளை உலர்த்தி கொள்கிறார்கள். குறிப்பாக மழை மற்றும் குளிரான காலநிலையில், வெளியே குளிர்ந்த காற்று வீசும்போது அல்லது மழை பெய்யும்போது, ​​மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே துணிகளை உலர்த்த (Dry Clothes) தொடங்குகிறார்கள். இருப்பினும், துணிகளை உலர்த்தும்போது, ​​துணிகளில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது துணிகளில் பாக்டீரியாக்களை உருவாக்கும்.  மழை மற்றும் குளிர்காலத்தில் துணிகளை உலர்த்துவதற்காக, வீட்டிற்குள்ளேயே துணிகளை காயவைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நடைமுறை உட்புற ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க செய்து, சில நபர்களுக்கு அபாயகரமான நுரையீரல் தொர்றுகள் உள்ளிட்ட ஆபத்தான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. தேசிய ஆஸ்பெர்கில்லோசிஸ் மையத்தின் பேராசிரியர் டேவிட் டென்னிங் மற்றும் அவரது முழுவினர் உட்பட மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், துவைத்த துணிகளை உள்ளே உலர்த்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். ஈரமான துணி துவைப்பதால் உருவாகும் ஈரமான சூழலில் செழித்து வளரக்கூரிய ஆஸ்பெர்கில்லஸ் பூஞ்சைகளை உள்ளிழுப்பதால் பல்வேறு பிரச்சனைகள் உருவாவதாக கண்டுள்ளனர்.

ஆட்டோ-இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு பூஞ்சை நுரையீரல் ஆஸ்பெர்கில்லோசிஸை ஏற்படுத்தும்.

துணிகளை உலர்த்தும்போது இதில் கவனம் தேவை:

வீட்டிற்குள் காற்றோட்டம் அவசியம்:

அறை அல்லது வீட்டிற்குள் சரியான காற்று சுழற்சி இருந்தால், துணிகள் சரியாக உலரும். இதன்மூலம், பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு இல்லை. துணியில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கவும், தடுக்கவும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்கலாம். இது, வீட்டிற்குள் இருக்கும் ஈரப்பதத்தை தடுத்து, காற்றோட்டமாக வைக்கும்.

நல்ல காற்றோட்டமான அறை:

துணிகளை உலர்த்துவதற்கு, நல்ல காற்றோட்டம் உள்ள அறையைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அறைக்குள் ஜன்னல்கள் இல்லையென்றால், துணிகளை உள்ளே காய வைத்து மின்விசிறிகளை பயன்படுத்தலாம். இதனால், துணிகள் விரைவில் காய வழிவகுக்கும்.

துணிகளை நன்றாக பிழிந்து கொள்ளவும்:

உங்கள் துணிகளைத் தொங்கவிடுவதற்கு முன், அதிலிருந்து முடிந்தவரை அதிகப்படியான தண்ணீரை கசக்கி காய போடுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...