பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!

Iceland's Diamond Beach: ஐஸ்லாந்தின் பனிக்கட்டிகள் மின்னும் வைர கற்கள் போல ஒளிரும் டைமண்ட் பீச் மிகவும் பிரபலமாது. வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த பீச் கருதப்படுகிறது. இது குறித்து மேலும் தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!

ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச்

Published: 

21 Apr 2025 22:54 PM

ஐஸ்லாந்து (Iceland) என்பது ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் வடக்குப் பகுதியில், கிரீன்லாந்துக்கு (Greenland) அருகிலும் நார்வே மற்றும் இங்கிலாந்துக்கு நடுவிலும் அமைந்துள்ளது. ஐஸ்லாந்திற்கு சுற்றுலா வந்தால் அங்கே உள்ள தீவுகள், எரிமலைகள், அழகான நீருற்றுகள், பனிக்காடுகள் என இயற்கையின் அழகு அனைத்தையும் ஒரே இடத்தில் காணலாம். உலகின் மிகவும் புகழ்பெற்ற இயற்கை ஒளியியல் நிகழ்வு நார்தன் லைட்ஸை (Northern Lights) ஐஸ்லாந்தில் தெளிவாக காண முடியும். பெயரில் ஐஸ் இருநந்தாலும் இங்கே மிக கடுமையான குளிர் இருக்காது. டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இங்கே குளிர் காலமாக கருதப்படுகிறது. அப்போது – 1 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். அதே போல ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் முதல் 15 டிகிரி செல்சியஸ் இருக்கும். இங்கே சில நாட்களில் 24 மணி நேரம் வெயில் இருக்கும். அதனால் மிட் நைட்டில் சூரியனை பார்த்து ரசிக்கலாம்.

ஐஸ்லாந்தில் ஐஸ்கட்டிகள் மிதக்கும் டயமண்ட் பீச், இயற்கையான சூடான நீர் நிறைந்த புளூ லகூன் நீரூற்று, கோல்டன் சர்கிள், ஐரோப்பாவின் மிகப்பெரிய பனிக்காடான வட்னஜோகுல் கிலேசியர் (Vatnajökull Glacier), நார்தன் லைட்ஸ் வியூ பாயிண்ட் போன்ற சுற்றுலா பகுதிகளை கண்டு மகிழலாம். ஐஸ்லாந்திற்கு நேரடியாக விமானங்கள் இல்லை. லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்கள் வழியாக ஐஸ்லாந்து செல்லலாம். மிதமான குளிர் மற்றும் புகழ்பெற்ற இயற்கை காட்சிகளால் சூழப்பட்டுள்ள ஐஸ்லாந்து, வாழ்நாளில் ஒரு முறை செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ

 

ஐஸ்லாந்தில் உள்ள பெல்ல்ஸ்ஃப்ஜாரா எனப்படும் டைமண்ட் பீச்  ஒரு விசித்திரமான கடற்கரையாக கருதப்படுகிறது. இங்கு காணப்படும் கருப்புமணலும் அதன்மேல் பரவி ஒளிரும் பனிக்கட்டிகளும் இந்த இடத்தைப் பளபளப்பான வைரங்கள் நிறைந்த கடற்கரைபோல் காட்சி அளிக்கின்றன. அங்கே உள்ள பனிக்கட்டிகள் ஜோக்குல்ஸார்லோன் ஏரி வழியாக மிதந்து கடலின் அலைகளால் கடற்கரைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்தக் காட்சி, இயற்கையின் ஒரு அபூர்வமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஆஸா ஸ்டெயனர்ஸ் (Asa Steinars) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அழகான டையமண்ட் பீச்சின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பலரையும் கவர்ந்தும், வியக்கவைத்தும் வருகிறது. அவரது பதிவில், இது தான் எனக்கான டைமன்ட்ஸ். இதற்கு பெல்ல்ஸ்ஃப்ஜாரா என்று பெயர். ஆனால் டைமண்ட் பீச் தான் அதற்கு பொறுத்தமாக இருக்கிறது. சூரிய அஸ்தமனத்தின் போது இங்கே உள்ள ஐஸ் கட்டிகள் மின்னுவதை பார்ப்பது அலாதியானது. என குறிப்பிட்டுள்ளார்