Food Recipes: மனம் மயக்கம் மைதா பால் அல்வா.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி..?
Maida Paal Halwa: இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்தும் ஏராளமான இனிப்பு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சுவையும் உண்டு, வரலாறும் உண்டு. அல்வா முதல் பாதுஷா வரை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகள். அந்தவகையில் இன்று எளிதாக வீட்டிலேயே மைதா பால் அல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

மைதா பால் அல்வாImage Source: Freepik
இந்திய உணவுகளில் இனிப்பு (Sweets) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இனிப்பு இல்லாமல் எந்த ஒரு விசேஷமும் இந்தியாவில் நடைபெறாது என்றே சொல்லலாம். ஏதேனும் விருந்து என்று சொன்னால் முதலில் இனிப்பு வகையான சேகரியும், கடைசியாக பாயாசமும் கொடுப்பதுதான் மரபு. இந்தியா (India) முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்தும் ஏராளமான இனிப்பு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சுவையும் உண்டு, வரலாறும் உண்டு. அல்வா (Halwa) முதல் பாதுஷா வரை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகள். அந்தவகையில் இன்று எளிதாக வீட்டிலேயே மைதா பால் அல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
மைதா பால் அல்வா:
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – அரை கிலோ
- வெள்ளை சர்க்கரை – 1 கிலோ
- கலர் கேசரி பொடி – கால் ஸ்பூன்
- நெய் – 1ஃ2 கப்
- ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
- திராட்சை – 10
- முந்திரி – 10
மைதா பால் அல்வா செய்வது எப்படி..?
- முதலில் எடுத்துள்ள மைதா மாவினை சிறிது லேசாக பிசைந்து கொள்ளவும்.
- அதன்பிறகு, பிசைந்து வைத்துள்ள மைதா மாவு மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி, 15 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்.
- மைதா மாவு நன்றாக ஊறி கரைந்ததும், அதன் மேல் உள்ள நீரை வடிக்கட்டி மூலம் வடித்து எடுத்து கொள்ளவும்.
- மீண்டும் அதேபோல், மைதா மாவில் தண்ணீரை ஊற்றி, 10 நிமிடத்திற்கு அதன் மீது தேங்கி நிற்கும் நீரை வடிக்கட்டி கொள்ளவும்.
- இப்போது, மீண்டும் மைதா மாவில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து, 10 நிமிடம் கழித்து அதில் தேங்கியுள்ள வடித்து கொள்ளவும்.
- இப்படியாக மீண்டும் மீண்டும் செய்வதன்மூலம் சுமார் அரை முதல் 1 லிட்டர் அளவிலான மைதா பால் கிடைக்கும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள சர்க்கரை கொட்டி, அதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி சிறிது கொதிக்க விடவும்.
- சர்க்கரை நுரைநுரையாக கரைந்து வரும் சர்க்கரையில் வடிக்கட்டி எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் அளவிலான மைதா பாலை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறவும்.
- மைதா பால் மற்றும் 5 நிமிடம் கழித்து கலர் கேசரி பொடியை தூவி நன்றாக கிளறியதும், உருக்கி எடுத்துவைத்துள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.
- நெய் நன்றாக மைதா பாலுடன் சேர்த்து கெட்டியான அல்வா பதம் வரும்வரை காத்திருக்கவும்.
- இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து அல்வா பதத்திற்கு வந்தவுடன், ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் அதில், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
- இப்போது செய்து வைத்துள்ள அல்வாவில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்தால் சுவையாக மைதா பால் அல்வா ரெடி.