Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipes: வீட்டில் சூப்பராக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சாப்பிட ஆசையா..? பட்டர் சிக்கன், பட்டர் கார்லிக் பிரான் ரெசிபி இதோ!

Butter Chicken and Prawn Recipes: நீங்கள் சமைக்கும் உணவு சுவையாக இருக்க வேண்டுமெனில் வெண்ணெயை சேர்த்து சமைக்கலாம். அந்தவகையில், வெண்ணெயை கொண்டு இன்று சிக்கன் மற்றும் இறால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Food Recipes: வீட்டில் சூப்பராக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சாப்பிட ஆசையா..? பட்டர் சிக்கன், பட்டர் கார்லிக் பிரான் ரெசிபி இதோ!
பட்டர் சிக்கன், பட்டர் கார்லிக் பிரான் Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 24 Mar 2025 06:54 AM

வெண்ணெய் தனியாக சாப்பிடும்போது மிகவும் சாதாரணமாகவும், சுவை இல்லாதது போன்று தோன்றும். ஆனால், நீங்கள் சமைக்கும் உணவில் சிறிது சேர்த்து சமைக்கும்போது அதன் சுவையை பல மடங்கு அதிகரிக்கும். அதன்படி, வெளிநாட்டு உணவு கலாச்சாரங்களில் உணவுகளில் சுவைக்காக பெரும்பாலும் வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. வெண்ணெயில் கொழுப்பு மற்றும் கலோரிகல் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவோர் மற்றும் எடையை குறைக்க விரும்புவோர் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. நீங்கள் சமைக்கும் உணவு சுவையாக இருக்க வேண்டுமெனில் வெண்ணெயை சேர்த்து சமைக்கலாம். அந்தவகையில், வெண்ணெயை கொண்டு இன்று சிக்கன் (Butter Chicken) மற்றும் இறால் (Garlic Butter Prawn) எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பட்டர் கார்லிக் பிரான்:

தேவையான பொருட்கள்

  • பிரான் – 200 கிராம்
  • மிளகு தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • மைதா மாவு – 2 டீஸ்பூன்
  • சோள மாவு – 1 டீஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டீஸ்பூன்
  • சில்லி ப்ளேக்ஸ் – சிறிதளவு
  • பட்டர் (வெண்ணெய்) – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

பட்டர் கார்லிக் பிரான் செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கி வந்த இறாலை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. கழுவிய இறாலுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான மிளகுத்தூள், கார்ன்பிளார் மாவு ஒரு ஸ்பூன் அளவிலான மைதா மாவு சேர்த்து கலந்து எண்ணெயில் நன்றாக போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
  3. இப்போது மற்றொரு கடாயை எடுத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. தொடர்ந்து, அதில் ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்றாக கட்டி சேராத அளவில் நன்றாக கிளறவும்.
  5. மாவு சேர்ந்ததும் கால் டம்ளர் அளவிலான தண்ணீரை சேர்த்து அடி பிடிக்காத அளவிர்கு கலக்கவும். இந்த நேரத்தில் பொறித்து எடுத்து வைத்துள்ள இறால்களை சேர்த்து கிளறவும்.
  6. அதன்மீது மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் மற்றும் தேவையான அளவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  7. கடாயில் உள்ள தண்ணீர் வற்றி வந்ததும், அதில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் ருசியான பட்டர் கார்லிக் பிரான் ரெடி.

பட்டர் சிக்கன்:

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – அரை கிலோ
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி- 2
  • முந்திரி பருப்பு – 10 முதல் 15 ▢
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

பட்டர் சிக்கன் செய்வது எப்படி..?

  1. முதலில் கடைகளில் வாங்கி வந்த சிக்கனை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ளவி.
  2. இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டேபிள் அளவிலான ஸ்பூன் பட்டர் சேர்த்து பெரிய வெங்காயம், முந்திரி பருப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
  3. இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் நன்றாக போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  4. அதே கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து சூடானதும் பட்டர் சேர்த்து உருகும் வரை காத்திருக்கவும்.
  5. உருகியதும் கழுவி எடுத்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கி மிக்ஸியில் அரைத்த எடுத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறவும்.
  6. சிக்கனுடன் கலவை சேர்ந்ததும் தேவையான அளவில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  7. சேர்த்த மசாலாகளில் பச்சை வாசனை போனதும், அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி வெந்ததும் கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான பட்டர் சிக்கன் ரெடி.
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?...
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!...