Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Home Made Mayonnaise : வீட்டிலேயே மயோனைஸ் செய்வது எப்படி? சிம்பிள் ரெசிபி இதோ!

Healthy Mayonnaise Recipe: தமிழ்நாட்டில் சாலையோரக் கடைகளில் மயோனைஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதால், வீட்டில் ஆரோக்கியமான மயோனைஸ் செய்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. முட்டை இல்லாமல், பனீர் மற்றும் கிரீம் பயன்படுத்தி எளிதாக செய்யக்கூடிய இரண்டு செய்முறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செய்முறைகள் ஆரோக்கியமானவை மற்றும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானவை. வீட்டில் செய்யப்படும் மயோனைஸ் கடைகளில் கிடைக்கும் மயோனைஸை விட மிகவும் ஆரோக்கியமானது.

Home Made Mayonnaise : வீட்டிலேயே மயோனைஸ் செய்வது எப்படி? சிம்பிள் ரெசிபி இதோ!
வீட்டிலேயே மயோனைஸ் செய்யும் முறைImage Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 24 Apr 2025 11:40 AM

மயோனைஸ் (Mayonnaise) சாண்ட்விச்கள் முதல் சிக்கன் ரைஸ் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும். இது மக்ரோனி, பாஸ்தா மற்றும் சாலட்டில் கூட பயன்படுத்தப்படுகிறது. மயோனைஸ் இல்லாமல் சீன உணவு சுவையாக இருக்காது. மயோனைஸ் என்றால் பலருக்கும் பைத்தியம் பிடிப்பார்கள். இருப்பினும், கடைகளில் கிடைக்கும் மயோனைஸ் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் (Hotel) மயோனைஸ் விற்பனை செய்ய தடை என்று தமிழ்நாடு அரசு (Tamil Nadu Govt) அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இன்னும் ஒரு வருடம் அமலில் இருக்கும் என்றும், இந்த உத்தரவை மீறும் கடை மற்றும் ஹோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு என்று தமிழ்நாடு அரசு எச்சரிச்சை விடுத்திருந்தது. இந்தநிலையில், உங்களுக்கு மயோனைஸ் சாப்பிட வேண்டும் என்றால் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அந்தவகையில், முட்டை இல்லாமல் ஆரோக்கியமான மயோனைஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

மயோனைஸ்:

தேவையான பொருட்கள்:

  • கிரீம் – 1
  • எண்ணெய் – கால் கப்
  • வினிகர் – 2 ஸ்பூன்
  • கருப்பு மிளகு – 1/4 ஸ்பூன்
  • கடுகு தூள் – 1/2 ஸ்பூன்
  • சர்க்கரை – ஒரு ஸ்பூன்
  • உப்பு – சிறிதளவு

முட்டை இல்லாமல் மயோனைஸ் செய்வது எப்படி..?

  1. முதலில் மயோனைசை தயாரிக்க முதலில் க்ரீம் எடுத்து மிக்ஸியில் ஊத்தி கொள்ளுங்கள். அதனுடன், அரைத்த சர்க்கரை, எண்ணெய், உப்பு, கடுகு பொடி சேர்க்கவும்.
  2. இதற்கு பிறகு கருப்பு மிளகு சேர்த்து, அனைத்து பொருட்களையும் மீண்டும் அரைக்கவும். அது கெட்டியானதும், வினிகரை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
  3. வினிகர் இல்லையென்றால், எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம். அவ்வளவுதான் சுவையான மயோனைஸ் ரெடி.
  4. இதை காற்று புகாத கொள்கலனில் மூடி குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். நீங்கள் அதை சுமார் 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.

பனீர் கொண்டு மயோனைஸ் செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:

  • பனீர் – 150 கிராம்
  • ஊறவைத்த முந்திரி – 1/4 கப்
  • வினிகர் – 2 ஸ்பூன்
  • கடுகு எண்ணெய் – 1 ஸ்பூன்
  • ஆர்கனோ பொடி
  • பூண்டு – 2 பல்
  • மிளகாய் – 1
  • உப்பு – சிறிதளவு
  • தேன் – 1 ஸ்பூன்
  • தண்ணீர்

செய்முறை:

  1. முதலில் நீங்கள் மிக்ஸி ஜாடியில் ஊறவைத்த முந்திரியைப் போட வேண்டும், அதனுடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும், பின்னர் பனீர் மற்றும் பூண்டு சேர்க்கவும்.
  2. கருப்பு மிளகு, மிளகாய், பூண்டு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இறுதியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை அல்லது வினிகர் சேர்க்கவும்.
  3. இப்போது மிக்ஸியில் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இந்த வழியை பின்பற்றினால் சுவையான மயோனைஸ் தயார்
  4. இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட மயோனைசேவை உங்கள் குழந்தைகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கொடுக்கலாம். ஏனெனில் இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்!
டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்!...
ஜெயிலர் 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளாரா?
ஜெயிலர் 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளாரா?...
உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன ?
உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன ?...
புற்று மண்ணில் உருவான மாரியம்மன்.. புன்னைநல்லூர் கோயில் ஸ்பெஷல்!
புற்று மண்ணில் உருவான மாரியம்மன்.. புன்னைநல்லூர் கோயில் ஸ்பெஷல்!...
சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?
சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?...
அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!...
அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?
அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?...
”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது" பிரதமர் மோடி!
”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது
கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்... ஏ.ஆர்.ரகுமான் பேச்சு
கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்... ஏ.ஆர்.ரகுமான் பேச்சு...
செல்வ வளம் பெருக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
செல்வ வளம் பெருக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!...
பிறந்தநாளில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் டாப் 5 சாதனைகள்..!
பிறந்தநாளில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் டாப் 5 சாதனைகள்..!...