AIDS Prevention: கணவன் மனைவிக்குள் எய்ட்ஸ் வர வாய்ப்புள்ளதா..? எச்.ஐ.வி வைரஸ் எவ்வாறு உருவாகிறது?

HIV Risk Factors: கணவன் மற்றும் மனைவி என இரண்டு பேரில் ஒரு துணைக்கு ஏற்கனவே எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்டால், தொற்று மற்ற துணைக்கும் பரவக்கூடும். பல நேரங்களில் மக்கள் தாங்கள் திருமணமானவர்கள் என்பதால், தங்களுக்கு எந்த தொற்றும் ஏற்பட வாய்ப்பில்லை என்று நினைத்து கவனக்குறைவாக இருக்கிறார்கள்.

AIDS Prevention: கணவன் மனைவிக்குள் எய்ட்ஸ் வர வாய்ப்புள்ளதா..? எச்.ஐ.வி வைரஸ் எவ்வாறு உருவாகிறது?

எய்ட்ஸ் முன்னெச்சரிக்கை

Published: 

23 Mar 2025 10:17 AM

மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இது பெற்ற நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். எச்.ஐ.வி நமது உடலின் டி செல்களை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் பலவீனப்படுத்துவதால், உடல் காய்ச்சல் போன்ற சிறிய நோய்களை கூட எதிர்த்துப் போராட முடியாமல் போகும். இந்தநிலையில், எய்ட்ஸ் (AIDS) மற்றும் எச்.ஐ.வி குறித்து மக்களிடையே பல வகையான குழப்பங்கள் நிலவி வருகிறது. அதன்படி, கணவன் மனைவி இடையே பாதுகாப்பின்றி ஒன்றாக இருந்தால் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுமா என்பதுதான். இதற்கான விடையை இங்கே தெரிந்து கொள்வோம்.

கணவன் மனைவி ஒன்றாக இருந்தால் எய்ட்ஸ் வருமா..?

பெரும்பாலும் எய்ட்ஸ் பாதுகாப்பற்ற உடலுறவு, பாதிக்கப்பட்ட இரத்தம், ஊசிகள் அல்லது பிரசவத்தின் போது எச்.ஐ.வி முக்கியமாக தாயிடமிருந்து குழந்தைக்கு என்ற அடிப்படையில் மட்டுமே பரவுகிறது. எனவே, திருமணமான தம்பதிகள் இந்த தொற்று குறித்து முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கணவன் மனைவி இடையே கூட எச்.ஐ.வி பரவக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கணவன் மனைவி உடலுறவு மேற்கொண்டாலும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றிக்கொள்ளலாம். வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் ஏற்கனவே எச்.ஐ.வி பாசிட்டிவ்வாக இருந்து, முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

எச்.ஐ.வி எவ்வாறு பரவுகிறது..?

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், கணவன் மற்றும் மனைவி என இரண்டு பேரில் ஒரு துணைக்கு ஏற்கனவே எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்டால், தொற்று மற்ற துணைக்கும் பரவக்கூடும். பல நேரங்களில் மக்கள் தாங்கள் திருமணமானவர்கள் என்பதால், தங்களுக்கு எந்த தொற்றும் ஏற்பட வாய்ப்பில்லை என்று நினைத்து கவனக்குறைவாக இருக்கிறார்கள். அதன்படி, ஒரு துணைக்கு ஏற்கனவே இந்த வைரஸ் இருந்தால், மற்ற துணைக்கும் தொற்று ஏற்படலாம்.

எச்.ஐ.வி தொற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் எச்.ஐ.வி பரிசோதனையை தவறாமல் செய்து கொள்ளுங்கள்.
  • உடல் உறவுக்கு முன் லேடெக்ஸ் ஆணுறை பயன்படுத்தவும்.
  • அனைத்து பால்வினை நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுங்கள்.
  • முடி வெட்டும் சலூன்களில் புதிய பிளேடைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்.
  • ஊசி போடும்போதோ அல்லது இரத்தப் பரிசோதனை மாதிரி கொடுக்கும்போதோ, புதிய பாக்கெட்டைத் திறந்த பின்னரே சிரிஞ்சை பயன்படுத்த அனுமதியுங்கள். கிருமி நீக்கம் செய்யப்பட்ட சிரிஞ்ச் பயன்படுத்தப்பட்டால், அதை ஏற்று கொள்ளாதீர்கள்.
  • பச்சை குத்திக் கொள்ளும்போது, ​​புத்தம் புதிய ஊசியை மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள்.

இரத்தம் அல்லது ஊசி:

ஒருவருக்கு ஏற்கனவே எச்.ஐ.வி இருந்து, அவரது இரத்தம் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டால், தொற்று பரவக்கூடும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஊசிகள், கத்திகள் மற்றும் பச்சை குத்துதல், துளையிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமாகவும் பரவக்கூடும்.

கர்ப்பம், பிரசவம் அல்லது தாய்ப்பால்:

ஒரு தாய்க்கு எச்.ஐ.வி தொற்று இருந்தால், அது கர்ப்பம், பிரசவம் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைக்குப் பரவக்கூடும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனென்றால், ஒரு சிறிய கவனக்குறைவு கூட பிறக்கவிருக்கும் குழந்தையை எச்.ஐ.வி நோயாளியாக மாற்றும்.