Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: ஆரோக்கியம் அனுதினம்! தேங்காய் பால் சாதம், முட்டைக்கோஸ் சாதம் செய்வது எப்படி..?

Healthy Tamil Rice Recipes: சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகமாக வரும் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் சோறில் உள்ள கார்போ ஹைட்ரேட்தான். இருப்பினும், சோறு சாப்பிடுவது பல வகையில் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும். அந்தவகையில், இன்று சிறப்புக்குரிய வகையில் தேங்காய் பால் சாதம் மற்றும் முட்டைக்கோஸ் சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். 

Food Recipe: ஆரோக்கியம் அனுதினம்! தேங்காய் பால் சாதம், முட்டைக்கோஸ் சாதம் செய்வது எப்படி..?
தேங்காய் பால் சாதம் - முட்டைக்கோஸ் சாதம்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 06 Apr 2025 22:27 PM

தமிழர்களின் உணவு வாழ்வியலில் சாதம் என்பது என்றுமே தவிர்க்க முடியாத ஒன்று. சிலருக்கு என்னதான் எவ்வளவு ஹெவியாக சாப்பிட்டாலும் ஒரு வாய் சோறு சாப்பிட்டால்தான் வயிறு நிரம்பியது போல் இருக்கும். அது வெள்ளை சோறாக இருந்தாலும் சரி, பிரியாணி போன்ற கலவை வகையாக இருந்தாலும் சரி. சோறு சாப்பிடும் திருப்தி வேறு எதிலும் இருக்காது. சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகமாக வரும் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் சோறில் உள்ள கார்போ ஹைட்ரேட்தான். இருப்பினும், சோறு சாப்பிடுவது பல வகையில் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும். அந்தவகையில், இன்று சிறப்புக்குரிய வகையில் தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) மற்றும் முட்டைக்கோஸ் சாதம் (Cabbage Rice) எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேங்காய் பால் சாதம்

தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி – 1 கப்
  • தேங்காய் பால் – 1½ கப்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • பட்டை – 2
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 1
  • நெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி..?

  1. முதலில் எடுத்து வைத்துள்ள பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. அடுத்து அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து சூடானதும் 2 ஸ்பூன் நெய், சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
  3. எண்ணெய் மற்றும் நெய் சூடானதும்  கிராம்பு, ஏலக்காய், பட்டை உள்ளிட்ட வற்றை சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்பு ஊறவைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி அரிசியை போட்டு லேசாக கிண்டவும்.
  5. அதன்பிறகு, எடுத்து வைத்துள்ள அரை கப் தேங்காய் பாலை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. லேசாக சோறு வெந்து பால் வற்றி மேலே சாதம் தெரியும் போது தீயை சிறிதாக்கி பாயில் பேப்பர் அல்லது வாழை இலை போட்டு மூடி 15 நிமிடம் தம்மில் விடவும்.
  7. 15 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.

முட்டைக்கோஸ் சாதம்

தேவையான பொருட்கள்

  •  முட்டைக்கோஸ் – 100 கிராம்
  • வேக வைத்து சாதம் – 2 கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
  • பொடி பொடியாக நறுக்கிய பூண்டு – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • உப்பு –  தேவையான அளவு
  • கடலை எண்ணெய் – 3 ஸ்பூன்
  • சீரக தூள் – 1 ஸ்பூன்

முட்டைக்கோஸ் சாதம் செய்வது எப்படி..?

  1. முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து கருகவிடாமல் வதக்கவும்.
  2. இவை நன்றாக வதங்கியதும், வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  3. தொடர்ந்து,  நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் சேர்த்து கிளறவும்.
  4. முட்டை கோஸ் சிறிதி வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்.
  5. எண்ணையிலேயே 7 நிமிடங்களுக்கு முட்டைகோஸை நன்றாக வெந்ததும் மிளகு தூள் சேர்த்து சிறிது கிண்டவும்.
  6. அடுத்ததாக, வேக வைத்து சாதம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.
  7. அவ்வளவு தான் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால்  சுவையான முட்டைகோஸ் சாதம் தயார்.
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!...
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?...