Food Recipe: ஹெல்தி புட்ஸ்..! கீரை கட்லெட் மற்றும் மசியல் செய்வது எப்படி..?

Healthy Spinach Recipes: கீரையில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த ஆரோக்கியமான கீரையைப் பயன்படுத்தி சுவையான கீரை கட்லெட் மற்றும் கீரை மசியல் செய்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Food Recipe: ஹெல்தி புட்ஸ்..! கீரை கட்லெட் மற்றும் மசியல் செய்வது எப்படி..?

கீரை கட்லெட் - கீரை மசியல்

Published: 

15 Apr 2025 16:41 PM

கீரை (Spinach) வகைகளில் ஏராளமான சத்துகள் உள்ளன. கீரையில் குறைவான அளவில் கலோரிகள் இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதன்படி, ஒரு கப் சுமார் 100 கிராம் கீரையில் 23 சதவீதம் கலோரிகள், 3.6 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 3 கிராம் புரதம் (Protein) உள்ளது. அதேநேரத்தில், கொழுப்பு என்பது கிடையாது. கீரையில் பல வகையான ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவற்றில் பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகள் அடங்கும். கீரையில் மெக்னீசியம், ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அல்சைமர் (Alzheimer) நோயின் அபாயத்தையும் குறைக்கின்றன. இந்தநிலையில், ஆரோக்கியம் நிறைந்த கீரையை கொண்டு கீரை கட்லெட் மற்றும் கீரை மசியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கீரை கட்லெட்:

தேவையான பொருட்கள்

  • பொடி பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 1 கப்
  • கடலைமாவு – 1/2 கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • பூண்டு – 3
  • பச்சை மிளகாய் – 3
  • சிறிய அளவிலான இஞ்சி துண்டு – 1
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு.

கீரை கட்லெட் செய்வது எப்படி..?

  1. முதலில் கடைகளில் வாங்கிய கீரைகளில் சமையலறை பைப் திறந்து வேகமாக ஓடும் தண்ணீரில் கல் மற்றும் மண் இல்லாதவாறு நன்றாக கழுவவும்.
  2. அதன்படி, முளைக்கீரையை பொடி பொடியாக நறுக்கி கல் அல்லது சால்ட் உப்பு சேர்த்து ஒரு குக்கரில் கீரை மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.
  3. அதன்பின், மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. தொடர்ந்து, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.
  5. இப்போது, கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கரைத்து கொள்ளவும்.
  6. இதன்பின், கீரையுடன் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும்.
    கீரை நன்கு வதங்கி சுருங்கியதும் ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆற வைத்து தட்டி வடை பதத்திற்கு எடுத்து கொண்டால் சுவையான கீரை கட்லெட் ரெடி.

கீரை மசியல்:

தேவையான பொருட்கள்

  • எந்த வகை கீரையாக இருந்தாலும் ஓகே – 1 கப்
  • காய்ந்த மிளகாய் – 5
  • உப்பு – சிறிதளவு
  • புளி – சிறிதளவு
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • உளுந்து – ஒரு ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – சிறிதளவு
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து

கீரை மசியல் செய்வது எப்படி..?

  1. கடை அல்லது மார்க்கெட்டில் வாங்கிய கீரையை தண்ணீரில் நன்கு அலசி எடுத்து கொள்ளவும்
  2. அதன்பின், கால் கப் அளவு தண்ணீருடன் பொடி பொடியாக வெட்டி வைத்துள்ள கீரையுடன் உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
  3. கீரை நன்றாக வெந்ததும் அதனுடன் எடுத்து வைத்துள்ள புளியைச் சேர்த்து, 2 நிமிடங்கள் வேகவிடவும்.
  4. இப்போது, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  5. மிக்ஸி அல்லது பருப்பு மத்துடன் கீரையுடன் தாளித்தவற்றைச் சேர்த்து தேவையான நீர் சேர்த்து நைசாக அரைக்கவும் அல்லது கடையவும்.
  6. இவை அனைத்தும் நன்றாக கரைந்தபின் எடுத்தால் சுவையான கீரை மசியல் ரெடி.