Hair Fall: தண்ணீரை மாற்றுவதால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுமா? தலை முடியை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
Hair Loss: தலையில் முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சிலர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, அங்குள்ள தண்ணீரை குளிக்க பயன்படுத்துவதன் மூலம் தங்கள் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையில் உண்மையா?

இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல் (Hair fall) பிரச்சனை அனைவருக்கும் மிகவும் பொதுவானதாகிவிட்டது. சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, எல்லா வயதினரும் இந்தப் பிரச்சனையால் போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சனை தன்னம்பிக்கையைப் பாதிப்பது மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு அதிகபடியான மன அழுத்தத்தையும் (Stress) ஏற்படுத்தும். பொதுவாக, தலையில் முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சிலர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, அங்குள்ள தண்ணீரை குளிக்க பயன்படுத்துவதன் மூலம் தங்கள் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையில் உண்மையா?
உண்மை எது..?
நீங்கள் ஒரு இடத்திலிருந்து புதிய இடத்திற்கு குடிபெயர்ந்து முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்க நேர்ந்தால், அது தண்ணீரில் உள்ள கூறுகளாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
தண்ணீரை மாற்றுவது முடி உதிர்தலை ஏற்படுத்துமா?
முடி பலவீனமடைவதற்கும் முடி உதிர்வதற்கும் காரணம் தண்ணீரை மாற்றி குளிப்பதால் அல்ல. மாறாக தண்ணீரின் மோசமான தரமே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முடி உதிர்தல் அல்லது முடி பலவீனமடைவதற்கு மோசமான தரத்திலான தண்ணீர் முக்கிய காரணமாக இருக்கலாம்.
தண்ணீரில் அதிக அளவு கடினமான உலோகங்கள் அல்லது குளோரின், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கெமிக்கல் கலவைகள் இருந்தால், அது முடி மற்றும் உச்சந்தலையை சேதப்படுத்தும். அத்தகைய நீரில் உங்கள் தலைமுடியை கொண்டு நீங்கள் குளிக்கும்போது, அது உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, முடியை உலர வைக்கும். இதன் காரணமாக, முடி பலவீனமடைந்து உடையத் தொடங்குகிறது. இது தவிர, இது முடியின் இயற்கை எண்ணெய்களையும் நீங்க தொடங்கும். இதை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம்.
எப்படி பாதுகாப்பது?
- தண்ணீரை சுத்திகரிக்க வடிகட்டி அல்லது சூடாக்கி பயன்படுத்தவும். இது தண்ணீரின் தரத்தை மேம்படுத்தும் மற்றும் முடியை சேதப்படுத்தாது.
- முடியின் ஈரப்பதத்தை பராமரிக்க, ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் கூடிய மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். இது முடி வறண்டு போவதைத் தடுக்கும்.
- வாரத்திற்கு ஒரு முறை தேங்காய், நெல்லிக்காய் அல்லது பாதாம் எண்ணெயைக் கொண்டு உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
- இதைச் செய்வதன் மூலம், முடி வேர்கள் பலப்படுத்தப்பட்டு, உச்சந்தலையில் ஈரப்பதம் இருக்கும்.
- நல்ல முடி ஆரோக்கியத்திற்கு, உங்கள் உணவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.
- பிரச்சனை மோசமடைந்தால், தோல் நிபுணரின் ஆலோசனையைப் பெற்று தலை முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள்.
(இணையத்தில் உலா வரும் குறிப்புகள் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் இதை முயற்சி செய்ய விரும்பினால் அதற்கு முன் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அதேசமயம் இந்த தகவல்களின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)