Healthy Pregnancy Foods: முதல் மூன்று மாதங்கள்..! கர்ப்ப காலத்தில் இந்த சத்துகள் மிக முக்கியம்.. ஏன் தெரியுமா..?
Early Pregnancy Nutrition: கர்ப்பத்தின் முதல் 3 மாத காலத்தில் சரியான ஊட்டச்சத்து எடுத்து கொள்வதன்மூலம் கரு வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமாக தாயை பராமரிப்பதற்கும் மிகவும் முக்கியம். எனவே அடிப்படை ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் நன்கு சீரான உணவு அவசியம்.

முதல் 3 மாதங்கள் கர்ப்ப காலத்தின்போது (Pregnancy) பெண்களுக்கு மிக முக்கியமான கால கட்டம். இதில், தாய் மற்றும் சேய் என இருவரும் ஆரோக்கியமாக இருப்பது நல்லது. கர்ப்பத்தின் இந்த காலகட்டத்தில் சரியான ஊட்டச்சத்து எடுத்து கொள்வதன்மூலம் கரு வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமாக தாயை பராமரிப்பதற்கும் மிகவும் முக்கியம். எனவே அடிப்படை ஊட்டச்சத்து (Nutrition) தேவைகளைப் பூர்த்தி செய்யும் நன்கு சீரான உணவு அவசியம். காலையில் எழுந்தவுடன் ஏற்படும் தலை சுற்றல் முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
முதல் 3 மாதங்கள் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
ஃபோலேட்டுகள்:
கருவின் நரம்பு வளர்ச்சியில் ஃபோலேட் முக்கிய பங்கு வகிப்பதால், ஆரம்ப கட்டத்திலேயே உணவில் ஃபோலேட்டைச் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. அதன்படி, முட்டைகோஸ் போன்ற இலை காய்கறிகள், பருப்பு வகைகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வைட்டமின் ஏ-யின் சிறந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண்களுக்கு நல்லது; இதில் நார்ச்சத்தும் உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது; மேலும் இதில் கருவின் வளர்ச்சிக்கு அவசியமான ஃபோலேட் உள்ளது.
புரதங்கள்:
இறைச்சிகள், முட்டை, பால் பொருட்கள், பீன்ஸ், டோஃபு மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் அதிக அளவு புரதங்கள் உள்ளது. இவற்றை அவ்வப்போது உணவில் எடுத்துகொள்வது முக்கியமானது. ஏனெனில் இது குழந்தையின் உறுப்பு, தசை மற்றும் திசு வளர்ச்சியை நேரடியாக ஊக்குவிக்கும்.
இரும்புச்சத்து:
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இது கர்ப்ப காலத்தில் தேவைப்படும் கூடுதல் இரத்தத்தை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது.
அதன்படி இரும்புச்சத்தை அதிகரிக்க உடலில் வைட்டமின் சி மூலங்களுடன் கீரை, பீட்ரூட் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வது நல்லது.
கால்சியம்:
குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமானது. பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், பாதாம் மற்றும் எள் போன்றவற்றை எடுத்து கொள்வதன் மூலம் பற்களும் வலுவான எலும்புகளை வளர உதவி செய்யும்.
நார்ச்சத்து:
தானிய வகைகளை எடுத்துகொள்வதன்மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும். இது கர்ப்ப காலத்தில் பொதுவாகக் காணப்படும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, பிரவுன் ரைஸ், ஓட்ஸ், முழு கோதுமை ரொட்டி மற்றும் குயினோவா போன்றவை நார்ச்சத்துக்களை தரும்.
நீரேற்றம்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பது முக்கியம். இவற்றை பெற அவ்வப்போது பிரஸ் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இவை நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது. மேலும், செரிமானத்திற்கு உதவுகிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)