Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடையில் சூடான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் – ஆச்சரிய தகவல்

Summer Tips: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் தர்பூசனி, வெள்ளரிக்காய் போன்றவற்றின் விற்னை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கோடைகாலத்தில் சூடான நீர் அருந்துவது நன்மை பயக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து கோடைகாலத்தில் சூடான நீர் அருந்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடையில் சூடான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் – ஆச்சரிய தகவல்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 12 Apr 2025 16:19 PM

உடலில் வழக்கத்தை விடவெப்பம் அதிகரிப்பது, அதிக வியர்வை வெளியேறுதல் போன்றவை கோடைகாலத்தை (Summer) துல்லியமாக கணிக்கும் அறிகுறிகள். இத்தகைய சூழ்நிலையில் உடலை குளிர்விக்கும் குளிர்ந்த நீர் மற்றும் இளநீர், தயிர், மோர் மற்றும் குளிர்பானங்களையே (Cool Drinks) அதிகம் எடுத்துக்கொள்ள விரும்புவர். தர்பூசனி, வெள்ளரிக்காய் போன்ற உடலைக் குளிர்விக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வர். அது நமக்கு உடனடி பலனளிக்கக் கூடியது. ஆனால் இதற்கு நேர்மாறாக,மருத்துவ நிபுணர்கள் கூறும் மிகவும் ஆச்சரியமளிக்கும் உண்மை ஒன்று இருக்கிறது: கோடையில் சூடான தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் (Doctor) தெரிவிக்கிறார்கள் இதனை முதலில் கேட்பதற்கு வியப்பாக தோன்றலாம். ஆனால் இதில் அறிவியல் காரணங்களும், ஆயுர்வேத மருத்துவ காரணமும் இருக்கின்றன. இந்த கட்டுரையில், கோடையில் சூடான தண்ணீர் குடிப்பதன் முக்கியத்துவத்தையும் அதற்கு பின்னணியில் உள்ள காரணங்களையும் பார்க்கலாம்.

பொதுவாக கோடைகாலங்களில் அதிக வெப்பத்தால் வழக்கத்தை விட நம் உடலில் நீர்சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக உடல் நல பிர்சனைகள் ஏற்படும். அதில் இருந்து விடுபட அதிக நீர் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். எலும்பிச்சை சாறு போன்ற பானங்களும் வெயில் பாதிப்பில் இருந்து பாதுகாக்க நமக்கு உதவும். பொதுவாக வெயிலை எதிர்கொள்ள குளிர் பானங்களை எடுத்துக்கொள்ள மட்டுமே மக்கள் அதிகம் விரும்புவோம். ஆனால் சூடான நீர் எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவ நிபுணர்களும் சொல்வது பலருக்கும் நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

வெயில் காலத்தில் சூடான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

சூடான தண்ணீர் குடிப்பது உடலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டாக்ஸின்ஸ் போன்ற விஷயங்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால் கோடைகாலத்தில் வியர்வை அதிகம் வெளியேறி உடல்  டிஹைட்ரேட் ஆகும். இதனால் சூடான நீரை அருந்துவது உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.

வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. குளிர்ந்த நீர் அருந்தினால் நமது செரிமான மண்டலம் சுருங்கி, உணவுப் பொருட்கள் செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் சூடான நீர் செரிமான மண்டலத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து செரிமானத்தை அதிகரிக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

கோடையில் குளிர்ந்த பொருட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் தொண்டையில் வலி, இருமல் போன்றவை ஏற்படலாம். சூடான தண்ணீர் தொண்டையில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. இதனால் தொண்டைப் பிரச்னை சரியாகும். காலை அல்லது இரவில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்துகிறது. சோர்வும் குறையும். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உடலுக்குள் உள்ள வெப்பத்தை சமன் செய்யும். வெப்ப நிலை அதிகரிக்கும்போது உடல் தன்னிச்சையாக சூழ்நிலையை சீராக்க முயற்சிக்கும். அப்போது வெதுவெதுப்பான தண்ணீர் அதற்கு துணை புரியும்.

கோடையில் சூடான தண்ணீர் குடிப்பது என்பது அன்றாட பழக்கமாக மாற்றக்கூடிய ஒரு எளிய வழிமுறை. இதில் என்னுடைய உடலை நலம் பெற செய்வதுடன், ஜீரணம், தூக்கம், உடல் சீராக இயங்கும். உடல் உறுப்புகளின் செயல்கள் அனைத்தையும் மேம்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. இப்படி சில எளிய பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...