Easter 2025: சென்னையில் ஈஸ்டர் விருந்து சாப்பிட ஆசையா? – வெளியான அறிவிப்பு!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ஆடம்பரமான ஈஸ்டர் பிரஞ்ச் வழங்கப்படுகிறது. மீட்பால் சூப், மீன் கேக்குகள், சால்மன் சாலட், வறுத்த சிக்கன், மற்றும் பல்வேறு வகையான இனிப்புகள், கேக்குகள், குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வகைகள் உள்ளிட்ட பல சுவையான உணவு வகைகள் இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Easter 2025: சென்னையில் ஈஸ்டர் விருந்து சாப்பிட ஆசையா? - வெளியான அறிவிப்பு!

ஈஸ்டர் விருந்து

Published: 

20 Apr 2025 09:52 AM

கிறிஸ்தவ மக்களின் வழிகாட்டியான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக (Easter Sunday) இன்று (2025, ஏப்ரல் 20) கொண்டாடப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் பண்டிகைகள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பின்பற்றி நடந்தாலும் அவை விருந்து உணவு இல்லாமல் முழுமையடையாது. இது சம்பந்தப்பட்ட மதத்தினரை சேர்ந்தவர்களை மட்டுமல்ல பிற மதங்களைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக உள்ளது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள், அதனை பின்பற்றுபவர்கள் இன்று ஈஸ்டர் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் நாடு முழுவதும் ஒவ்வொரு நகரங்களிலும் பல உணவகங்கள் இந்நாளை சிறப்பித்து மகிழ்வதற்காக சுவையான விருந்துகளைத் தயார் செய்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஈஸ்டர் விருந்து (Easter Feast) கொடுக்க நினைப்பவர்கள் எங்கு செல்லலாம் என்பதைப் பற்றிக் காணலாம்.

நீங்கள் ஈஸ்டர் பண்டிகையன்று சென்னையில் இருந்தால், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தாஜ் கோரமண்டலில் உள்ள இன்று முழுவதும் உணவருந்தி மகிழலாம். அனிஸில் ஆடம்பரமான ஈஸ்டர் சண்டேவின் விருந்தை அனுபவிக்கும் வகையில் ஈஸ்டர் மீட்பால் சூப், ஆசிய மசாலா மீன் கேக்குகள், வேகவைத்த சால்மன் & அஸ்பாரகஸ் சாலட், பழச்சாறுடன் வறுத்த சிக்கன், ஷெப்பர்ட்ஸ் பை, மற்றும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மட்டன் ராகவுட், மசித்த உருளைக்கிழங்கு பிரேஸ் செய்யப்பட்ட மட்டன் ஷாங்க்ஸ் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஈஸ்டர் கேக்குகள், உலர் பழம் & தேங்காய் கேட்டாக்ஸ், பூசணிக்காயில் செய்யப்பட்ட இனிப்பு மற்றும் கப்கேக்குகளுடன் உங்கள் உணவை நிறைவு செய்யும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பிரிவில் மக்ரூன்கள், பல்வேறு வகையான சாக்லேட்டுகள், ஈஸ்டர் முட்டைகள், ஈஸ்டர் கேரட் கப்கேக்குகள், மினி-பர்கர்கள், ஃபிங்கர் சீஸ் சாண்ட்விச்கள் மற்றும் ஸ்மைலி உருளைக்கிழங்குகளும் இடம் பெற்றிருக்கும்.

மேலும் ஃபார்ச்சூன் ஈஸ்டர் முட்டைகள், வித்தியாசமான கப் கேக்குகள், ஈஸ்டர் பாப்சிகல்ஸ், கிளாசிக் ஹாட் கிராஸ் பன்கள், ரெட் வெல்வெட் கிராஸ் பன்கள், சினமன் ஹாட் கிராஸ் பன்கள் மற்றும் ஹேசல்நட் கிராஸ் பன்களும் இந்த விருந்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஈஸ்டர் விருந்தை நாம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மதியம் 12:30 முதல் பிற்பகல் 3 மணி வரை உணவு வகைகளும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இனிப்பு வகைகளும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு, இனிப்பு எல்லாம் சேர்த்தும் ரூ.3,250 கட்டணமும், மற்றவைகளுக்கு அதற்கேற்றவாறு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. +91 44 6600 2827 மற்றும் +91 78248 62311 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.