மணிமுத்தாறு அருவி: இந்த சம்மருக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறந்த சாய்ஸ் – அப்படி என்ன ஸ்பெஷல்?

Manimutharu Falls: பாபநாசம், மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, காரையார் அணை என திருநெல்வேலி அருகே குடும்பத்துடன் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த கோடையில் ஒருநாள் பயணமாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவழிக்க அருமையான சாய்ஸ்

மணிமுத்தாறு அருவி:  இந்த சம்மருக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறந்த சாய்ஸ்  - அப்படி என்ன ஸ்பெஷல்?

மணிமுத்தாறு அருவி

Published: 

15 Apr 2025 23:33 PM

கோடை விடுமுறை (Summer Holidays) தொடங்கிய நிலையில் மக்கள் எங்கே சுற்றுலா செல்வது என ஆலோசனையை தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக வீட்டில் சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் நிச்சயம் அவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைவிடுமுறை என்றாலே சட்டென நினைவுக்கு வருவது ஊட்டி (Ooty), கொடைக்கானல்(Kodaikanal) தான். ஆனால் இரண்டு தளங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பொறுமையாக, நின்று நிதானமாக ஒரு இடத்தைக் கூட ரசிக்க முடியாது. அவசர கதியில் தான் சுற்றுலா இடங்களை பார்க்க வேண்டியிருக்கும். கடந்த ஏப்ரல் 14, 2025 தமிழ் புத்தாண்டு அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு கார்களில் அணி வகுத்ததால் கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கும் மேலாக டிராஃபிக் ஜாம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஊட்டி, கொடக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதால் நாம் நினைத்த மாத்திரத்தில் அங்கு செல்ல முடியாது.

ஊட்டி, கொடைக்கானல் தாண்டி தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போலவே ஏராளமான மலை வாசஸ்தலங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஏற்காடு, கொல்லிமலை, பாபநாசம், சிறுமலை, மேகமலை என அந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் இந்த பதிவில் திருநெல்வேலிக்கு அருகே உள்ள பாபநாசம் மற்றும் அதற்கு அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களை பார்க்கலாம்.

பாபநாசம்

பாபநாசம், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள சிவன் கோவில் மிகவும் பிரபலமானது.  இது தாமிரபரணி ஆற்றின் கரையில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கிறது. இங்கே தாமிரபரணி ஆற்றில் குளித்து சிவனை வழிபட்டால் நமது பாவம் போகும் என்பது நம்பிக்கை. இந்த கோடையில் குடும்பத்துடன் சுற்றுலா வர சிறந்த இடம். மேற்கு தொடர்ச்சி மலையில் பசுமையான இந்த பகுதி கண்களுக்கு விருந்தாக அமையும்.

அகஸ்தியர் அருவி

பாபநாசத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அகஸ்தியர் அருவி. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் இந்த மூலிகை தண்ணீரில் குளிப்பதற்கு அலாதியானது. மக்களால் இந்த இடம் அதிகம் அரியப்படாததாகவே இருக்கிறது. இந்த கோடையில் குடும்பத்துடனும் அல்லது நண்பர்களுடனும் சுற்றுலா வர இந்த இடம் மிகச் சிறந்தது.

காரையார் அணை

இந்த அணையில் நீர் தேங்கியிருப்பதை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த அணை 55.5 மில்லியன் கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்டது. பாபநாசம், அகஸ்தியர் அருவி பார்க்க வருபவர்கள் இந்த பிரம்மாண்ட அணையைும் நீரின் சலசலப்பையும் சுற்றியுள்ள காடுகளையும் ரசித்துவிட்டு செல்லலாம்.

மணிமுத்தாறு அருவி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக புகழ்பெற்ற அருவிகளில் ஒன்று. இங்கே ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும் என்பதால் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வர். இந்த கோடைவிடுறையில் இங்கே குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ ஏற்ற இடம்.