வளர்ந்து வரும் குழந்தைகள்… பெற்றோர் தவறவிடக் கூடாத விஷயங்கள் என்னென்ன?

Signs that you Need to See a Dentist: பிறந்த குழந்தையின் வளர்ச்சியில் பல் ஆரோக்கியம் மிக முக்கியமான பங்காற்றுகிறது. பல் மற்றும் வாய் சுத்தம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு எப்போது பல் முளைக்கும்? எப்போது பல் மருத்துவரை சந்திக்க வேண்டும்? பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இப்போது இந்த விடயங்களை விரிவாக பார்க்கலாம்.

வளர்ந்து வரும் குழந்தைகள்... பெற்றோர் தவறவிடக் கூடாத விஷயங்கள் என்னென்ன?

குழந்தையின் பல் வளர்ச்சி

Published: 

20 Apr 2025 18:22 PM

பிறந்த குழந்தையின் பல் வளர்ச்சி மிக முக்கியம் (Dental development of a newborn is very important). பல் முளைத்த 6 மாதங்களுக்குள் அல்லது ஒரு வயதுக்குள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். பற்கள், ஈறுகள் மற்றும் வாய்வழி ஆரோக்கியத்தை பரிசோதித்து வழிகாட்டல் அளிக்கப்படும். விரல் உறிஞ்சல், பாட்டில் பல் சிதைவு போன்ற பழக்கங்கள் தவிர்க்க வேண்டும். பல் துலக்கும் பழக்கம் 3 வயதுக்குப் பிறகு பற்பசையுடன் ஆரம்பிக்கலாம். வழக்கமான பரிசோதனைகள் மூலம் குழந்தையின் பல் ஆரோக்கியத்தை பாதுகாத்து வளர்க்கலாம். பொதுவாக, குழந்தைக்கு பல் முளைக்கும் காலம் 8 மாதங்களில் தொடங்கலாம். ஆனால் இது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். சில குழந்தைகள் பிறக்கும் போதே பல் கொண்டு பிறக்கலாம். சிலருக்கு ஒரு வயது ஆகும் போது பல் முளைக்கும். எப்போது முளைத்தாலும், பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது முக்கியம்.

பல் மருத்துவரை சந்திக்க வேண்டிய காலம்

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் பீடியாட்ரிக் டென்டிஸ்ட்ரி வழிகாட்டுதலின்படி, குழந்தை பல் மருத்துவரை முதன்முறையாக பல் முளைத்த 6 மாதங்களுக்குள் அல்லது ஒரு வயதுக்குள் சந்திக்க வேண்டும். இதன் மூலம் பல் வளர்ச்சி முறையாக நடக்கிறதா என முன்கூட்டியே கண்காணிக்க முடியும்.

முதலாவது பல் பரிசோதனையில் என்ன நடக்கும்?

  • குழந்தையின் உணவுக் பழக்கங்கள் பற்றி கேட்பார்
  • பல் துலக்கும் பழக்கம் மற்றும் வாய் சுத்தம் பற்றிய தகவல் கேட்பார்
  • பற்களின் நிலை மற்றும் கடிப்புத் திறன் பரிசோதனை
  • ஈறு, தாடை, வாய்வழி திசுக்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்வையிடுவார்
  • விரல் உறிஞ்சுதல், பாட்டில் பல் சிதைவு போன்ற பழக்கங்களை கவனித்து அறிவுரை தருவார்

இந்த முறையில், பல் சிகிச்சை குறித்த பயம் குழந்தைகளிடம் குறைவடைய உதவும். இல்லையேல், இது வளர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் பல் பதட்டத்துக்கு வழிவகுக்கும்.

  • முதலாவது பல் பரிசோதனையின் நன்மைகள்
  • ஆரம்ப கட்ட பல் சிதைவை கண்டறிதல்
  • குழந்தைக்கு ஏற்ற உணவுப்பழக்கங்கள் குறித்து அறிவுரை
  • வாய் சுத்தம் செய்யும் முறையை கற்றல்
  • தவறான பழக்கங்கள் (விரல் உறிஞ்சல், வாய்வழி சுவாசம்) வாய் தசைகள் மீது தாக்கம் ஏற்படுத்துவதைத் தவிர்ப்பு

பல் மருத்துவரை சந்திக்க வேண்டிய அறிகுறிகள்

குழந்தைகள் தவழும் போது கீழே விழும் வாய்ப்பு அதிகம். இதனால் பல் உடையலாம் அல்லது இரத்தம் கசியலாம். இந்நிலையில் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். குளிர்ந்த துணியால் ஒத்தடம் கொடுத்து வலியை குறைத்தல் சிறந்த முறையாகும்.

பல் எக்ஸ்-ரே தேவையா?

பல் மருத்துவர் பரிசோதனையின் போது தேவைப்பட்டால் மட்டுமே பல் எக்ஸ்-ரே பரிந்துரைக்கப்படுவார். இது பல் வேர் வளர்ச்சியை கண்காணிக்க உதவும். ஆனால், எல்லா குழந்தைகளுக்கும் தேவையில்லை என்பதால் பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை.

பெற்றோர்களுக்கான பல் பராமரிப்பு குறிப்புகள்

  • பற்கள் முளைக்கும் முன் ஈறுகளை ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும்
  • முதல் பல் வந்ததும் சிறிய பல் துலக்கியை பயன்படுத்தலாம்
  • 3 வயதிற்குப்பின் பற்பசை பயன்படுத்தலாம்
  • தூங்கும் போது பால், இனிப்பு பானங்கள் தவிர்க்க வேண்டும்
  • 8 வயது வரை பல் தேய்க்கும் பழக்கம் பெற்றோர் கூடவே இருந்து கற்பிக்க வேண்டும்
  • பல் மருத்துவரிடம் அழைத்து செல்லும் நேரம்

குழந்தை தூங்கும் நேரத்தில் அல்லாமல் விழித்திருக்கும் நேரத்தில் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். அப்போது பரிசோதனை சிறப்பாக நடக்கும். உணவு உண்ட பிறகு அழைத்துச் செல்லும் பட்சத்தில் கூடுதல் நன்மை ஏற்படும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil News பொறுப்பேற்காது.)