Washing Machine Cleaning: மாதம் ஒரு முறை இப்படி சுத்தம் செய்தால் போதும்.. வாஷிங் மெஷினின் ஆயுட்காலம் நீளும்!

Washing Machine Maintenance: வாஷிங் மெஷினை பயன்படுத்தும் போது, அதற்குள் தண்ணீர் (Water), சோப்பு, தூசி மற்றும் பிற பொருட்கள் இயந்திரத்தில் குவிந்து, அதை அழுக்காக்குகின்றன. இந்த அழுக்கு அவ்வப்போது சுத்தம் செய்யப்படாவிட்டால், இயந்திரம் சரியாக வேலை செய்வதில் பிரச்சனையை உண்டாக்கி சிக்கலை தரும்.

Washing Machine Cleaning: மாதம் ஒரு முறை இப்படி சுத்தம் செய்தால் போதும்.. வாஷிங் மெஷினின் ஆயுட்காலம் நீளும்!

வாஷிங் மெஷின் சுத்தம்

Published: 

23 Mar 2025 09:52 AM

வாஷிங் மெஷின் (Washing Machine) என்று அழைக்கப்படும் துணி துவைக்கும் இயந்திரம் மூலம் துணி துவைப்பது நம் அனைவருக்கும் மிகவும் எளிதான ஒன்றாக ஆகிவிட்டது. இது நமது நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவதோடு, துணிகளைத் துவைக்கவும் எளிதாக வேலை செய்கிறது. சிலர் வாரத்திற்கு ஒரு முறை துணி துவைக்க இயந்திரத்தை பயன்படுத்துவார்கள். அதேநேரத்தில் ஒரு சிலர் அதை தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், தேவைகேற்ப பயன்படுத்தும் போதோ அல்லது அவசர அவசரமாக வாஷிங் மெஷினை பயன்படுத்தும் போதோ, அதற்குள் தண்ணீர் (Water), சோப்பு, தூசி மற்றும் பிற பொருட்கள் இயந்திரத்தில் குவிந்து, அதை அழுக்காக்குகின்றன. இந்த அழுக்கு அவ்வப்போது சுத்தம் செய்யப்படாவிட்டால், இயந்திரம் சரியாக வேலை செய்வதில் பிரச்சனையை உண்டாக்கி சிக்கலை தரும். எனவே, வாஷிங் மெஷினை சுத்தமாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். அந்தவகையில், வாஷிங் மெஷினை சுத்தம் செய்வதற்கான சில எளிய வழிகள் இங்கே..

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

வாஷிங் மெஷினின் இயந்திரத்தின் டிரம்மில் 2 கப் வினிகரைச் சேர்க்கவும். இப்போது இயந்திரத்தை அதிகபட்ச வெப்பநிலையில் இயக்கவும். அது முடிந்ததும், ½ கப் பேக்கிங் சோடாவைச் சேர்த்து மற்றொரு முறை சுழற்சியை இயக்கவும். வினிகர் மற்றும் சமையல் சோடா அழுக்கு, தூசி மற்றும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். மேலும், வினிகரில் துர்நாற்றத்தை போக்கும் ஆற்றல் உள்ளது.

எலுமிச்சை சாறு

இரண்டு பெரிய எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து, சாற்றை வாஷிங் மெஷினின் டிரம்மில் ஊற்றவும். எலுமிச்சையின் அமில பண்புகள் பாக்டீரியாக்களைக் கொன்று புதிய மற்றும் புத்துணர்ச்சி வாசனையையும் தருகின்றன. அதேநேரத்தில், எலுமிச்சை சாறு அழுக்கை அகற்ற உதவும் அமில பண்புகளைக் கொண்டுள்ளது.

டூத் பிரஷ் மற்றும் பழைய பல் துலக்கும் பேஸ்ட்:

பல் துலக்கும் பேஸ்ட் இருந்தால் அதை பழைய பல் துலக்கும் டூத் பிரஷில் வைத்து வாஷிங் மெஷினில் உள்ள சோப்பு தட்டு மற்றும் கேஸ்கெட் போன்ற இயந்திரத்தின் அதிக அழுக்கு பகுதிகளை எளிதாக சுத்தம் செய்யலாம். இதை 2 வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை செய்யும்போது வாஷிங் மெஷின் சீராக இயங்க உதவி செய்யும்.

வெந்நீர் வைத்து சுத்தம் செய்தல்:

வாஷிங் மெஷின் பயன்படுத்தாத நேரத்தில் ஒரு பாத்திரத்தில் நீரை சூடு செய்து, அதற்குள் ஊற்றலாம். இதனால், காலியான இயந்திரத்தில் அதிக வெப்பநிலையில் தண்ணீர் ஊற்றும்போது பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளைக் கொல்லும். மேலும், ஏதேனும் அடப்புகள் இருந்தாலும் அதனையும் இந்த சுடுதண்ணீர் வெளியேற்றும்.

போராக்ஸ் பவுடர்:

சோடியம் டெட்ராபோரேட் என்னும் போராக்ஸ் பவுடரை சூடான நீரில் கரைத்து இயந்திரத்தில் ஊற்றவும். இது வாஷிங் மெஷினில் உள்ள இரும்பு பகுதிகளை துருப்பிடிப்பதைத் தடுக்கிறது. மேலும் அதில் ஏதேனும் படிகங்கள் இருந்தாலும் அதனையும் எளிதாக சுத்தம் செய்கிறது.