Air Cooler Cleaning: கோடை காலத்தில் ஏர் கூலர் சரியாக வேலை செய்யவில்லையா..? இப்படி க்ளீன் செய்தால் ஜில் ஜில்தான்!
Summer Air Cooler Cleaning Guide: கோடை வெப்பத்தில் ஏர் கூலர்கள் அவசியம். ஆனால், சரியாக வேலை செய்யாவிட்டால், அது தூசி, அழுக்கு காரணமாக இருக்கலாம். இந்தக் கட்டுரை, ஏர் கூலரின் விசிறி இறக்கைகள், தண்ணீர் தொட்டி, வடிகட்டி மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றை எளிதாக சுத்தம் செய்யும் வழிமுறைகளை விளக்குகிறது. சுத்தம் செய்யும் முன் கூலரை அணைப்பது மிகவும் முக்கியம். சரியான சுத்தம், கூலரின் ஆயுளை நீட்டித்து, சிறந்த குளிர்ச்சியை அளிக்கும்.

ஏர் கூலர் சுத்தம்
கோடைக்காலம் (Summer) முழுவதுமாக இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்கு அதிகபட்ச வெப்பநிலை ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் எல்லோரிடமும் ஏன் கண்டிஷனரை (AC) வாங்க பணம் இருக்காது. இதன் காரணமாக விலை குறைவான ஏர் கூலர்களை பயன்படுத்துகிறார்கள். உங்கள் ஏர் கூலர்கள் (Air Cooler) சரியாக குளிர்விக்கவில்லை என்றால், அதை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் தூசி மற்றும் அழுக்கு காரணமாக கூலர் சரியாக வேலை செய்யாது. ஆனால், கவலைப்படத் தேவையில்லை, உங்கள் ஏர் கூலர்களை சில நிமிடங்களில் சுத்தம் செய்யக்கூடிய சில எளிய குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
மின் விசிறி இறக்கைகள்:
ஏர் கூலர்களில் உள்ள மின்விசிறி இறக்கைகளின் மேல் படிந்துள்ள தூசியை மென்மையான துணியால் துடைக்கலாம். இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். இதற்காக, நீங்கள் கடைகளில் கொண்டு சென்று சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. இது பணத்தையும் செலவாக்கும். இப்படி செய்வதன் மூலம், உங்கள் மின்விசிறி மீண்டும் புதியது போல் இயங்கி, புதிய காற்றை ஜில்லென்று தரும்.
தண்ணீரை வடிகட்டுதல்:
ஏர் கூலரின் அடிப்பகுதியில் தேங்கிய தண்ணீரை வடிகட்டுவது நல்லது. பெரும்பாலான குளிர்விப்பான்கள் தண்ணீரை வெளியேற்ற ஒரு வடிகால் பிளக்கைக் கொண்டுள்ளன. இருப்பினும், சில வடிக்கட்டிகளில் தூசி மற்றும் அழுக்கு அதிகமாக படிந்துவிடும். இது ஏர் கூலரில் இருந்து வெளிவரும் குளிர்ந்த காற்றை தடுக்கும். எனவே, வடிக்கட்டியை சுத்தம் செய்வது நல்லது.
டேங்க் சுத்தம் செய்தல்:
ஏர் கூலரின் தண்ணீர் தொட்டியையும் அவ்வபோது சுத்தம் செய்வது நல்லது. ஏனெனில், இங்கு அழுக்கு மற்றும் கிருமிகள் சேரக்கூடும். எனவே, கோடை காலத்தில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது.
ஏர் கூலரின் வெளிப்புறம்:
ஏர் கூலருக்குள் எப்படி அடிக்கடி சுத்தம் செய்வது முக்கியமோ, அதேபோல் வெளியேயும் சுத்தம் செய்வது நல்லது. ஏர் கூலரின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய லேசான சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன், கூலர் அணைக்கப்பட்டு, பிளக் அவுட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். அனைத்தையும் சுத்தம் செய்தபின், அனைத்து பாகங்களையும் மீண்டும் மாற்றிய பிறகு, கூலரை இயக்கி, எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்த்து இயக்குவது நல்லது.
ஏர் கூலரை முறையாக சுத்தம் செய்யும்போது, அதன் காற்றின் குளிர்ச்சி அதிகரிக்கிறது. சுத்தம் செய்வது கூலர் பேட்கள் காற்றை நன்றாக குளிர்விக்க உதவுகிறது. மேலும் விசிறியும் எந்த தடையும் இல்லாமல் சீராக இயங்க உதவி செய்யும். இது ஏர் கூலரின் குளிரூட்டும் திறனை மேம்படுத்தி, உங்களுக்கு குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் காற்றை வழங்கும்.