Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Baby Teeth Brushing: குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்குவது சரியானது..? பேஸ்ட் ஆரோக்கியமானதா..?

Best Age to Start Brushing Baby Teeth: ஒரு குழந்தை ஃப்ளோரைடு பற்பசையை துப்ப வேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் வரை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. பேஸ்ட்டை பயன்படுத்துவதற்கான சரியான வயதை மனதில் கொள்வதும் முக்கியம். அந்தவகையில், பிறந்து குறிப்பிட்ட வயதை எட்டும்வரை குழந்தைகள் எப்போது பல் துலக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Baby Teeth Brushing: குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்குவது சரியானது..? பேஸ்ட் ஆரோக்கியமானதா..?
சிறுவர்கள் பல் பராமரிப்புImage Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Mar 2025 10:36 AM

ஒரு குழந்தை பிறந்து எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பல் துலக்க (Baby teeth brushing) ஆரம்பிக்க வேண்டும் என்பதில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரிவது கிடையாது. பொதுவாக ஒரு வயது அல்லது முதல் பல் முளைத்த பிறகு பல் துலக்க உதவுமாறு பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேநேரத்தில், ஒரு குழந்தை எந்த வகையான பற்பசையைப் (பேஸ்ட்) பயன்படுத்த வேண்டும் என்பது, குழந்தை எப்போது பற்பசையை முழுவதுமாகத் துப்புவதற்கு வசதியாக இருக்கும் என்பதையும் பெற்றோர்கள் கவனிப்பது முக்கியமானது. ஒரு குழந்தை ஃப்ளோரைடு பற்பசையை துப்ப வேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் வரை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. பேஸ்ட்டை பயன்படுத்துவதற்கான சரியான வயதை மனதில் கொள்வதும் முக்கியம். அந்தவகையில், பிறந்து குறிப்பிட்ட வயதை எட்டும்வரை குழந்தைகள் (Baby oral hygiene) எப்போது பல் துலக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, ​​பொதுவாக பற்கள் முளைத்த பின்னரே பற்பசையைப் பயன்படுத்தத் தொடங்கலாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பட்டாணி அளவிலான பேஸ்ட்டுடன் தங்களது குழந்தைகளுக்கு பல் துலக்க கற்று கொடுங்கள். மேலும் இரண்டு வயதிற்குள் ஒரு பட்டாணி அளவிலான அளவை விட சற்று அதிகமாக வைத்து, தேய்த்து பழக்கலாம். பல் துலக்கும்போது, ​​குழந்தைகள் தற்செயலாக அதை விழுங்காமல் பார்த்துக் கொள்ளுவது மிக மிக முக்கியம். ஏனெனில் பல் துலக்கும் பேஸ்ட்டில் ஏதேனும் ஆபத்தான இரசாயனங்கள் இருந்தால், அது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். சில நேரங்களில், உங்கள் குழந்தையின் வாய்வழி ஆரோக்கியம், கிருமிகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட விவரங்களையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி தருவது நல்லது. இது, குழந்தைகளுக்கு காலையில் எழுந்ததும் முதல் வேளையாக பல் துலக்கும் பழக்கத்தை கடைபிடிக்க உதவும். காலப்போக்கில் இது மிகப்பெரிய நல்ல பழக்கமாகவும் மாறும்.

2 முதல் 5 வயது வரை பேஸ்ட் கொடுக்கலாமா..?

2-5 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு பட்டாணி அளவு ஃப்ளோரைடு பேஸ்ட் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. உங்கள் பிள்ளைக்கு பல் துலக்குவதற்கு பெற்றோர்களின்  உதவி கண்டிப்பாக தேவைப்படும். அப்போது, பேஸ்ட்டை கொண்டு துலக்கிய பிறகு, அந்த எச்சிலை துப்புமாறு சிறுவர்களுக்கு அவ்வபோது நினைவூட்ட வேண்டும். சிறு வயதிலேயே பல் துலக்குவது தொடர்பான விஷயங்களை பெற்றோர்கள் கற்று கொடுப்பதன்மூலம், நாளடைவில் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கத்தை ஆரோக்கியத்தை பேண உதவி செய்யும். அதேபோல், உங்கள் பிள்ளைகள் நீங்கள் இல்லாத நேரத்தில் பேஸ்டை வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானது.

பேஸ்ட்டுக்கு பதிலாக பிள்ளைகளுக்கு என்ன கொடுக்கலாம்..?

உங்கள் பிள்ளைகளுக்கு பேஸ்ட்டுக்கு பதிலாக பற்களை சுத்தம் செய்ய கடுகு எண்ணெய், உப்பு மற்றும் மஞ்சள் கொண்டு சுத்தம் செய்யலாம். இது பற்களை சுத்தம் செய்வதிலும், ஈறுகளை வலுவாக வைத்திருப்பதிலும் உதவுகிறது. இது சிறு குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்றாலும், குறிப்பிட்ட வயதை கடந்த சிறுவர், சிறுமிகளுக்கு இது நல்ல பலனை தரும்.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...