Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஸ்ரேயா 42 வயதிலும் ஃபிட்டாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்

Shriya Saran's Fitness Secret: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரேயா, 42 வயதிலும் திரைப்படங்களில் படு ஆக்டிவாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த நிலையில் தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரேயா 42 வயதிலும் ஃபிட்டாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?  அவரே சொன்ன சீக்ரெட்
நடிகை ஸ்ரேயா
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 28 Apr 2025 21:44 PM

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா (Shriya Saran). அதன் பிறகு சிறிது இடைவேளைக்கு பிறகு வர்ஷம் படத்தின் தமிழ் ரீமேக்கான மழை படத்தில் நடித்தார். ரவி மோகன் (Ravi Mohan) ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.பி.பி.சரண் தயாரித்திருந்தார். அதன் பிறகு சிறிது இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த்துக்கு (Rajinikanth) ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். அந்தப் படம் தான் தமிழில் அவரை முன்னணி ஹீரோயினாக மாற்றியது. அதன் பிறகு விஜய், தனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் கடைசியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்த தமிழில் நீண்ட இடைவேளைக்கு ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ வருகிற மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமல்லாது ஏராளமான தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். சில மலையாளம், கன்னட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவருக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த அண்ட்ரே கொஸ்சீவ் (Andrei Koscheev) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 42 வயதாகும் ஸ்ரேயா அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் தான் இருக்கிறார்.

ஸ்ரேயா சரணின் ஃபிட்னஸிற்கு காரணம்

 

 

View this post on Instagram

 

A post shared by Sithara Kudige (@sithara_kudige)

ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்துக்கு பேட்டியளித்த ஸ்ரேயா சரண் தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது பேசிய அவர், ”யோகா பல வருடங்களாக என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இது உடலை மேம்படுத்துவதுடன்  மனதையும் அமைதிப்படுத்துகிறது என்கிறார்.  மேலும் நீச்சலும் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று; இது முழு உடலைுக்கும் பயிற்சி செய்ய வைத்து, மூட்டுகள் மீது அழுத்தம் இல்லாமல் ஆக்டிவாக இருக்க உதவுகிறது” என்று பேசினார்.

உடற்பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளும் உணவுகள்

 

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

”நடனம் எப்போதும் என் இதயத்தில் இடம் பெற்றிருக்கும் என்ற அவர், இது ஒரு சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, மகிழ்ச்சியின் ஆதாரமும் கூட. உடற்பயிற்சி என்பது கஷ்டமானதாக இருக்க கூடாது.  மகிழ்வானதாக இருக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முன்பு சற்றே எளிமையான மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிறைந்த உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம். நான் வாழைப்பழம் மற்றும் ஒரு பாதாம் சாப்பிடுவேன். பாதாம் புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளால் நிறைந்திருப்பதால் நீண்ட நேரம் ஆற்றலை வழங்கும். அதே போல வாழைப்பழம் விரைவாக கார்போஹைட்ரேட் சக்தியை வழங்குகிறது.” என்று பேசினார்.

சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!
சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!...
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!...
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?...
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!...
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!...
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?...
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்...
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!...
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?...
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!...