Acne Prevention: முகம் கழுவினால் முகப்பரு வராதா..? எது கட்டுக்கதை..? எது உண்மை..?
Acne Myths: முகப்பரு வந்துவிட்டால் நம்மை பார்ப்பவர்கள் எல்லாம் பலரும் பல கதைகளை சொல்வார்கள். இந்தநிலையில், நம்மை சுற்றி முகப்பரு (Acne) பற்றிய கட்டுக்கதைகளில் சிலவற்றை ஆராய்ந்து அதற்கான உண்மைகளை முடிந்தவரை தெரியப்படுத்துகிறோம்.

முகப்பரு என்பது யாருக்கும் நிச்சயம் பிடிக்காத ஒன்றுதான். முகப்பரு முகத்தின் அழகை கெடுப்பது மட்டுமின்றி, அகத்திற்கும் வேதனை தரும். முகப்பரு வந்துவிட்டால் நம்மை பார்ப்பவர்கள் எல்லாம் பலரும் பல கதைகளை சொல்வார்கள். ஒரு சிலரின் பேச்சை கேட்டு, தவறான சிகிச்சையை மேற்கொண்டுவிடுவோம். இதன் விளைவாக நீண்டகால தோல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எது வேலை செய்கிறது, எதனால் முகம் தெளிவு பெறுகிறது (Clear Skin) என்ற யதார்த்தத்தை அறிந்துகொள்வதற்கு மக்களுக்கு நேரம் எடுத்துவிடுகிறது. இந்தநிலையில், நம்மை சுற்றி முகப்பரு (Acne) பற்றிய கட்டுக்கதைகளில் சிலவற்றை ஆராய்ந்து அதற்கான உண்மைகளை முடிந்தவரை தெரியப்படுத்துகிறோம்.
கேள்விகளும், பதில்களும்..
முகப்பரு டீன் ஏஜ் பசங்களுக்கு மட்டும் ஏற்படுமா..?
முகப்பரு பெரும்பாலும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு மட்டுமே ஏற்படுகிறது என்றும் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. முகப்பரு எந்த வயதிலும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுகிறது. வயதுவந்த முகப்பரு இப்போதெல்லாம் மிகவும் பொதுவானது. மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் எந்த வயதினருக்கும் முகப்பரு ஏற்படலாம்.
அடிக்கடி முகத்தை கழுவினால் முகப்பருவை தடுக்க முடியுமா..?
அடிக்கடி முகத்தை கழுவினால் முகத்தில் முகப்பரு ஏற்படாமல் தடுக்கலாம் என்று பலர் கூறி கேள்வி பட்டிருப்போம். இதுவும் உண்மை கிடையாது. அடிக்கடி முகம் கழுவினால் மிகவும் வறண்டு போகக்கூடும், இதன் விளைவாக எண்ணெய் உற்பத்தி மற்றும் முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை லேசாக சுத்தம் செய்வது சிறந்த தீர்வாகும்.
அதிகப்படியான சூரிய ஒளி முகப்பருவை நீக்குமா..?
சூரிய ஒளி பருக்களை குறைக்க உதவும் ஒன்று சிலர் கூறுகின்றனர். இது ஒரு வகையில் உண்மை என்றாலும், அதிகப்படியான சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் சேதம், அதிகப்படியான நிறமி மற்றும் சருமத்தை முன்கூட்டியே வயதாக்க வழிவகுக்கும். எனவே, சூரிய ஒளியில் செல்லும்போது சன்ஸ்கீரீனை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
மேக்கப் போடுவதால் முகப்பரு ஏற்படுமா..?
முகப்பரு ஏற்பட மேக்கப் போடுவதும் ஒரு காரணம் என்று பலரும் சொல்லி கேள்வி பட்டிருப்போம். காமெடோஜெனிக் அல்லாத மற்றும் எண்ணெய் இல்லாத பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது. இவை சருமத்தில் துளைகளை அடைக்காது அல்லது வெடிப்பு மற்றும் பருக்களை ஏற்படுத்தாது. இருப்பினும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை சரியாக அகற்றத் தவறுவது முகப்பரு உருவாக காரணமாகிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)