Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“பிரதமர் மோடியிடம் போய் சொல்” கணவரை கொன்றுவிட்டு பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி.. நடந்தது என்ன?

Pahalgam Terror Attack : காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் தனது கணவர் மஞ்சுநாத்தை இழந்த சுற்றுலாப் பயணி பல்லவி துயர அனுபவத்தை பகிர்ந்தார். மேலும், தானும், தனது 18 வயது மகனும் பயங்கரவாதியை எதிர்கொண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“பிரதமர் மோடியிடம் போய் சொல்” கணவரை கொன்றுவிட்டு பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Apr 2025 13:15 PM

ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 23: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் (Pahalgam Terror Attack) ஈடுபட்ட பயங்கராவாதி ஒருவர், பெண்ணை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் கணவரை கொலை செய்துவிட்டு, அவரை பயங்கரவாதி ஒருவர் மிரட்டி இருக்கிறது. இந்த துயர அனுபவத்தை அந்த பெண் பகிர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கூடி இருந்து சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டனர்.

“பிரதமர் மோடியிடம் போய் சொல்”

அதாவது, கர்நாடகாவின் ஷிவமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத். இவரது மனைவி பல்லவி. இவர் தனது மகனுடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வந்தனர். பஹல்காமில் நடந்த தாக்குதலில் மஞ்சநாத்தை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த பல்லவி மற்றும் அவரது மகனை கொலை செய்யாமல், மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து கூறிய பல்லவி, “நாங்கள் பஹல்காமில் இருக்கிறோம். என் கணவர் என் கண் முன்னே இறந்துவிட்டார். கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த என் கணவர் மஞ்சுநாத் மற்றும் எங்கள் மகன் அபிஜேயாவுடன் நான் இங்கு வந்திருந்தேன்.

என்னுடன் என் கார் டிரைவரும் இருந்தார். அப்போது, பயங்கரவாதிகள் என் கணவரை கொன்றேன். என் கணவர் கொல்லப்பட்ட பிறகு, நான் பயங்கரவாதிகளில் ஒருவரை எதிர்கொண்டேன். நீ என் கணவரைக் கொன்றுவிட்டாய். என்னையும் கொல்லு என்று கூறினேன். நீ நாயே. நீ என் தந்தையைக் கொன்றாய். எங்களையும் கொல்லு என்று என் மகன் கூறினான்.

கணவரை கொன்றுவிட்டு பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி

உன்னை நான் கொல்ல மாட்டேன். போய் மோடியிடம் சொல்லுங்கள் என்று பயங்கரவாதி கூறினார். பயங்கரவாதிகள் எங்கள் முன்னாடியே இருந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இல்லை. புதுமணத் தம்பதிகள் பலர் இருந்தனர். ஆண்கள் குறிவைக்கப்பட்டனர்.

பெண்கள், குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். நான் என் சொந்த ஊரான சிவமொக்காவுக்குத் திரும்ப விரும்புகிறேன். என் கணவரின் உடலை விமானம் மூலம் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக திரும்ப வேண்டும்” என்று கூறினார்.

மஞ்சுநாத் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலாளி, அவரது மனைவி பல்லவி  வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். மேலும்,  அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பித்தவர்களையும், உயிரிழந்த குடும்பங்களையும் மத்திய உள்துறை அமித் ஷா சந்தித்தார். இந்த சந்திப்பிபோது, கொடூரமாக செயல்களை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமித் ஷா கூறினார்.

 

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது ஆரம்பம்?
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது ஆரம்பம்?...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்! ஐபிஎல்லில் 2 முக்கிய விஷயங்கள் தடை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்! ஐபிஎல்லில் 2 முக்கிய விஷயங்கள் தடை...
உங்க கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கணுமா? அப்போ இந்த தப்ப பண்ணாதீங்க!
உங்க கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கணுமா? அப்போ இந்த தப்ப பண்ணாதீங்க!...
எங்க அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றாறு... பிரேம்ஜி
எங்க அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றாறு... பிரேம்ஜி...
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்... மௌனம் கலைத்த பாகிஸ்தான்!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்... மௌனம் கலைத்த பாகிஸ்தான்!...
முகப்பரு தொல்லையா..? இதை செய்தால் மறையும் அதிசயம்..!
முகப்பரு தொல்லையா..? இதை செய்தால் மறையும் அதிசயம்..!...
ஏஐ மூலம் வீடியோவை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ரம்யா கண்டனம்!
ஏஐ மூலம் வீடியோவை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ரம்யா கண்டனம்!...
உலகின் உயரமான நடராஜர் சிலை.. தமிழ்நாட்டில் இந்த கோயில் தெரியுமா?
உலகின் உயரமான நடராஜர் சிலை.. தமிழ்நாட்டில் இந்த கோயில் தெரியுமா?...
சித்திரை அமாவாசை எப்போது? - இதெல்லாம் செய்ய மறக்காதீங்க!
சித்திரை அமாவாசை எப்போது? - இதெல்லாம் செய்ய மறக்காதீங்க!...
காதலனின் மிரட்டலால் மனமுடைந்த ஆசிரியை... பின்னர் நடந்த துயரம்...!
காதலனின் மிரட்டலால் மனமுடைந்த ஆசிரியை... பின்னர் நடந்த துயரம்...!...
பளபளப்பான சருமம் பெற பீட்ரூட், கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?
பளபளப்பான சருமம் பெற பீட்ரூட், கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?...