Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர்ந்து அழுத குழந்தை.. தாய் செய்த கொடூர செயல்.. பறிபோன பிஞ்சு உயிர்!

Crime News : குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்ததால், தாய் குழந்தையை கொலை செய்துள்ளார். குழந்தையை வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் வீசி தாய் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார், குழந்தையை கொலை செய்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அழுத குழந்தை.. தாய் செய்த கொடூர செயல்.. பறிபோன பிஞ்சு  உயிர்!
குழந்தையை கொன்ற தாய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Apr 2025 13:52 PM

குஜராத், ஏப்ரல் 10: குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்ததால், 22 வயது பெண் குழந்தையை கொடூரமாக கொலை (Infant murder Gujarat) செய்துள்ளார். குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி தாய் கொலை செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குஜராத், ஏப்ரல் 10: குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்ததால், 22 வயது பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி தாய் கொலை செய்துள்ளார்.  இதனை அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அழுத குழந்தை

குஜராத் மாநிலம் அகமதபாத் பகுதியைச் சேர்ந்தவர் கரிஷ்மா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் தனது மூன்று மாத மகன் கயாலை காணாமல் போனதாக அவரது கணவரிடம் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து, இருவரும் சேர்ந்து மேகனிநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், குழந்தையை தீவிரமாக தேடினர். அப்போது, அம்பிகாநகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, முரண்பட்ட தகவலை கூறினார். தனது மகனை ஒரு அறையில் வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றதாகவும், திரும்பி வந்தபோது அவன் காணாமல் போனதாகவும் அவர் கூறினார்.

தாய் செய்த கொடூர செயல்

இவரது வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிரமாக அவரிடம் விசாரித்தனர்.  அப்போது, அவர் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கரிஷ்மா கர்ப்பமானதிலிருந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அடிக்கடி உடம்பு சரியில்லாமல் இருப்பார்.  தனது குழந்தை அதிகமாக அழுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்தனர்.

மன உளைச்சலில் இருந்த கரிஷ்மா, குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனேவில் தனது இரண்டு குழந்தைகளை தாய் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது இரண்டு குழந்தையும் க தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து சிகிச்சை முடிந்த பிறகு, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!...
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?...
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?...
திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!
திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!...
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!...
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!...
திருச்சியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன? எப்படி செல்வது?
திருச்சியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன? எப்படி செல்வது?...
என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!
என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!...
நிற்கும் அம்மனுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம் செய்யும் கோயில்
நிற்கும் அம்மனுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம் செய்யும் கோயில்...
சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து!
சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து!...
தாயின் கருவறையில் இருமுறை பிறந்த ஒரே குழந்தை.. அதிசயம் ஆனால்..?
தாயின் கருவறையில் இருமுறை பிறந்த ஒரே குழந்தை.. அதிசயம் ஆனால்..?...