“முதியோர் இல்லத்துக்கு போங்க” மாமியாரின் முடியை தரதரவென இழுத்து கொடூரமாக தாக்கிய மருமகள்!
முதியோர் இல்லத்திற்கு செல்ல மறுத்த, மாமியாரை, மருமகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமியாரின் தலைமுடியை தரதரவென இழுத்து காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்திய பிரதேசம், ஏப்ரல் 06: மத்திய பிரதேசத்தில் மாமியாரை, மருமகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியோர் இல்லத்திற்கு செல்ல மறுத்ததால் மாமியாரை, மருமகள் கொடூரமாக தாக்கி உள்ளார். அவரது முடியை தரதரவென இழுத்து காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் நடந்துள்ளது.
“முதியோர் இல்லத்துக்கு போங்க”
குவாலியல் பகுதியைச் சேர்ந்தவர் சர்ளா பத்ரா (70). இவருக்கு விஷால் பத்ரா என்ற மகன் இருக்கிறார். இவருக்கு நீலகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
அதாவது, மாமியார் சர்ளா பத்ராவை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நீலகா கூறி வந்திருக்கிறார். ஆனால், இதற்கு அவரது கணவர் விஷால் பத்ரா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
தனது தாயருக்கு உடல் நிலை சரியில்லாததால் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப விஷால் பத்ரா மறுத்துள்ளார். இருப்பினும் மாமியாரை அனுப்ப வேண்டும் என்று நீலிகா தொடர்ந்து கூறி வந்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து நீலகா தனது தந்தை மற்றும் சகோதரனிடம் கூறியுள்ளார்.
மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்
BIG NEWS 🚨 Daughter-in-law beats her 70-year-old mother-in-law as she refuses to move to Old age home in Gwalior.
The Victim’s husband has passed away 4 years ago.
Sarla, the victim, alleged that her daughter-in-law Neelika wants to take over the family’s property.
Neelika… pic.twitter.com/F5BCvEJHrG
— Satyaagrah (@satyaagrahindia) April 5, 2025
இதனால் இவர்கள் இவருக்கு விஷாலுடன் பேசுவதற்காக 2025 ஏப்ரல் 4ஆம் தேதி வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, சர்ளாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்பவது தொடர்பாக மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, இதனை வந்த மாமியார் சர்ளாவின் முடியை தரவென இழுத்து நீலகா கொடூரமாக தாக்கி உள்ளார்.
மேலும், அவரை காலால் எட்டி உதைத்து, கொடூரமாக அடித்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகள் தாக்கியல், மாமியார் சர்ளாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கண், உடல் முழுக்க பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.