Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லியில் அதிர்ச்சி: ஒரே ஒரு பாட்டுதான்… நின்று போன கல்யாணம்…

Delhi DJ Song: டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், DJ "சன்னா மெரேயா" பாடலை இசைத்த போது, மணமகன் முன்னாள் காதலியின் நினைவுகளை நினைத்து திருமணத்தை உடனே நிறுத்தி வெளியேறினான். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, DJ-யை பாராட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும் இந்நிகழ்வு பெண் வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டெல்லியில் அதிர்ச்சி: ஒரே ஒரு பாட்டுதான்… நின்று போன கல்யாணம்…
ஒரு பாடலால் நின்றுபோன திருமணம் Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 27 Apr 2025 09:30 AM

டெல்லி ஏப்ரல் 27: டெல்லியில் நடந்த ஒரு திருமணத்தில், DJ குழுவினர் “சன்னா மெரேயா” பாடலை இசைத்த போது, மணமகனுக்கு முன்னாள் காதலியின் நினைவுகள் வந்தன. இதனால், திருமணத்தை நிறுத்தி, அவர் மேடையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, பலர் DJ குழுவுக்கு நன்றி தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டு ‘ஜோடி’ திரைப்படத்தில், சிம்ரன் திரைப்படத்தில் இதே போன்று தனது திருமணத்தை நிறுத்திய சம்பவம் நினைவுக்கு வந்தது. திருமணங்களில் இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிகழ்வு நெட்டிசன்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

டெல்லி திருமணத்தில் DJ பாடலால் பரபரப்பு

திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு சரியில்லை, வரதட்சிணை குறைவாக உள்ளது என்கிற காரணங்களுக்காக திருமணங்கள் சில சமயங்களில் கடைசி நேரத்தில் நிறுத்தப்படுகின்றன. ஆனால், தில்லியில் நடந்த ஒரு ஆச்சரிய நிகழ்வில் DJ இசைத்த பாடல் ஒரு திருமணத்தை நிறுத்துவதற்கான காரணமாக அமைந்துள்ளது.

முன்னாள் காதலியின் நினைவு திரும்பியது

டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது, DJ குழுவினர் பிரபலமான பாலிவுட் பாடல் “சன்னா மெரேயா” பாடலை இசைத்தனர். இந்த உணர்ச்சிப் பூர்வமான பாடலைக் கேட்டதும், மணமகன் தன்னுடைய முன்னாள் காதலியின் நினைவுகளை நினைத்து, திருமணத்தை உடனே நிறுத்தி, மேடையை விட்டு வெளியேறினான்.

சமூக ஊடகங்களில் பரபரப்பு

இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இன்ஸ்டாகிராம் தளத்தில் Gaurav Kumar Goyal பகிர்ந்த இந்த பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. பலரும் DJ குழுவினருக்கு நன்றி தெரிவித்து, இந்த பாடலை இசைத்ததன் மூலம் மணமகனுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவியதாக கூறி இருக்கின்றனர்.

திருமணத்தில் நிகழ்ந்த சோகமான நிகழ்வு

இன்று நடைபெறும் திருமணங்கள் எல்லாம் தங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை தருவதாக மாற்றும் நோக்கில், குடும்பத்தினரே பல்வேறு விஷயங்களை திட்டமிடுகின்றனர். நடனம், இசை, உணவு, அலங்காரம் என பல பரிசுத்த திட்டங்களை வைத்திருக்கின்றனர். ஆனால், இதுபோன்ற திடீரென நிகழும் சம்பவங்களும் திருமண விழாக்களை புரட்டிப்போடுவதாக அமைந்துள்ளது.

பாடல், காதல் மற்றும் உணர்ச்சி

இந்த சம்பவம் போல, 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜோடி’ திரைப்படத்தில், “ஒரு பொய்யாவது சொல் கண்ணே” பாடல் படமானதில் சிம்ரன் தனது திருமணத்தை நிறுத்திய சம்பவம் நினைவுக்கு வருவது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த DJ பாடலின் மூலம் ஏற்பட்ட உணர்ச்சி மிகுந்த மாற்றம், சமூக ஊடகங்களில் கலந்துரையாடலுக்கு வழிவகுத்துள்ளது.

கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!...
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!...
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!...
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!...
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!...
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்...
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா.....
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்...
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?...
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!...
பட்டையை கிளப்பிய மும்பை.. பரிதாபமாக தோற்ற லக்னோ!
பட்டையை கிளப்பிய மும்பை.. பரிதாபமாக தோற்ற லக்னோ!...