வாங்குற சம்பளம் ரூ.5000… ரூ.2.2 கோடி வரி செலுத்துமாறு காவலாளிக்கு வந்த நோட்டீஸ்

Uttar Pradesh Crime : உத்தரப் பிரதேச காவலாளி ராஜ்குமார் சிங்குக்கு ரூ.5,000 சம்பளத்தில் பணிபுரியும் நிலையில் ரூ.2.2 கோடி வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது பேன் கார்ட் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறான நோட்டீஸ் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உரிய நடவடிக்கை கோருகின்றனர்.

வாங்குற சம்பளம் ரூ.5000... ரூ.2.2 கோடி வரி செலுத்துமாறு காவலாளிக்கு வந்த நோட்டீஸ்

ரூ.2.2 கோடி வரி செலுத்துமாறு காவலாளிக்கு நோட்டீஸ்

Published: 

06 Apr 2025 09:46 AM

உத்தரப் பிரதேசம் ஏப்ரல் 06: உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh), அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் மாதம் ரூ.5,000 ஊதியம் பெறும் காவலாளியாக பணிபுறியும் நிலையில் இவருக்கு ரூ.2.2 கோடி வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் (Watchman shocked after notice to pay Rs 2.2 crore in tax) அனுப்பியதால் அதிர்ச்சியடைந்துள்ளார். தான் அந்த அளவிற்கு சம்பாதிக்கவே இல்லை என வேதனை தெரிவிக்கிறார். அவரது பேன் கார்ட் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (PAN card may have been misused) என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுபோன்ற தவறான நோட்டீஸ் பெறும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. முன்னதாக இதேபோல் முட்டை வியாபாரி, ஜூஸ் கடை வைத்தவர் போன்ற பலரும் இதேபோல் சிக்கியுள்ளனர்.

ரூ.5,000 ஊதியத்துக்கு பணிபுரியும் காவலாளி

உத்தரப் பிரதேசம், அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் என்ற நபர், மாதம் வெறும் ரூ.5,000 ஊதியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். ஆனால், சமீபத்தில் அவருக்கு வருமான வரித்துறையிலிருந்து வந்த ஒரு நோட்டீஸ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில் ரூ.2.2 கோடி வரி தொகையை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த ராஜ்குமார், தான் இந்த அளவிற்கு சம்பாதிக்கவே இல்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ரூ.2.2 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ்

நோட்டீசில் ரூ.2.2 கோடி வரி தொகையை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த ராஜ்குமார், தான் இந்த அளவிற்கு சம்பாதிக்கவே இல்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, ராஜ்குமாரின் பேன் கார்ட் பயன்படுத்தி மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கான ஆதாரங்களை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தள்ளுவண்டி முட்டை வியாபாரியும் பாதிப்பு

சமீப நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தள்ளுவண்டி முட்டை வியாபாரிக்கு கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்தது. அதுபோலவே, உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஜூஸ் கடை வியாபாரிக்கும் அதே மாதிரியான நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சாதாரண மக்கள் பெயரில் நடந்த பணப்பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வருமான வரித் துறை அனுப்பும் இந்த வகை நோட்டீஸ்கள் பலரையும் பெரும் குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் உள்ளாக்கி வருகின்றன.

உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தல்

ராஜ்குமார் சிங் சம்பவம் பொதுமக்கள் தகவல் பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளை வெளிச்சமிடுகிறது. இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கபட்டவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.