5 ஆண்டுகளில் 25 முறை பிரசவித்த பெண்?.. உத்தர பிரதேசத்தில் ஷாக் சம்பவம்!
Woman gave 25 Births in 5 Years | உத்தர பிரதசேத்தை சேர்ந்த ஒரு பெண் வெறும் 10 ஆண்டுகளில் 25 முறை பிரசவித்ததாக அதிகாரிகள் தகவல் பதிவு செய்த சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பணத்துக்காக இந்த மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேசம், ஏப்ரல் 11 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) ஒரு பெண் வெறும் 5 ஆண்டுகளில் சுமார் 25 முறை பிரசவித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அந்த பெண் 5 முறை கருத்தடை செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், அதிர்ச்சியடைந்த பலரும் அது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில், ஒரு பெண் 5 ஆண்டுகளில் 25 முறை பிரசவித்ததாக கூறுவது உண்மையா, அதிகாரிகள் இவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
5 ஆண்டுகளில் 25 முறை பிரசவித்த பெண்?
ஒரு குழந்தை பிறக்க சுமார் 10 மாதங்கள் வரை ஆகும். தாயின் கருவில் குழந்தை உருவாவதற்கு இந்த 10 மாதங்கள் தேவைப்படும். அவ்வாறு தாயின் கருவறையில் முழு வளர்ச்சி அடைந்த பிறகு தான் குழந்தை பிறக்கும். ஒருவேளை அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றாலும், குறைந்தது 9 மாதங்களாவது நிறைவடையே வேண்டும். சில சமயங்களில் வேறு வழியே இல்லாத போது, குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ ஆபத்து என்ற நிலையில் குழந்தைகள் முன்கூட்டியே அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுக்கப்படும்.
எவ்வாறாயினும் ஒரு குழந்தை குறைந்தது 7 மாதங்களாவது தாயின் கருவரையில் இருந்தாக வேண்டும். அதற்கும் குறைவாக பிறக்கும் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 5 ஆண்டுகளில் 25 முறை பிரசவித்ததாக அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். இந்த சம்பவம் கேட்போரை மட்டுமல்லாது சம்மந்தப்பட்ட அந்த பெண்ணையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தன்னை குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெண்
உத்தர பிரதேச மாநில ஆக்ராவை சேர்ந்தவர் கிருஷ்ண குமாரி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இவர் வெறும் 5 ஆண்டுகளில் 25 முறை பிரசவித்ததாகவும், அவருக்கு 5 முறை கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ண குமாரிக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில், வெறும் ரூ.45,000 பணத்திற்காக அதிகாரிகள் போலி கணக்கை எழுதி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சிடைந்த அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த செயலில் ஈடுபட்ட 4 ஊழியர்களின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். வெறும் ரூ.45,000 பணத்திற்காக அதிகாரிகள் இத்தகைய போலி கணக்கு எழுதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.