தோழியுடன் ரூமில் இருந்த இளைஞர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?

Uttar Pradesh Crime News : தனது பெண் தோழியுடன் ஹோட்டல் அறையில் இருந்த ஐடி ஊழியர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழி கழிவறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, ஐடி ஊழியர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தோழியுடன் ரூமில் இருந்த இளைஞர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?

மாதிரிப்படம்

Updated On: 

12 Apr 2025 10:46 AM

நொய்டா, ஏப்ரல் 12: உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடன் அறையில் இருந்த இளைஞர், திடீரென தூக்கிட்டு தற்கொலை (Uttar Pradesh Techie Suicide) செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா செக்டார்-27ல் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநலிம் ஹாத்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் குமார் (38). இவர் ஐடி ஊழியாக பணியாற்றி வந்தார். இவர் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி தனது பெண் தோழியுடன் ஹோட்டலில் தங்கி இருந்தார்.

தோழியுடன் ரூமில் இருந்த இளைஞர்

அப்போது, அந்த பெண் அறையில் இருந்த கழிவறைக்கு சென்றிருந்தார். சில மணி நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து பார்த்தபோது, உமேஷ் குமார், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த பெண், உடனே கூச்சலிட்டர்.

இதனை அறிந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனே அறைக்கு வந்தனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உமேஷ் குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

அதில், உமேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது  உறுதியானது. இந்த சம்பவம் குறித்து நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உமேஷ் குமார் எதற்கான தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைசியில் எடுத்த விபரீத முடிவு

அதே நேரத்தில், மதுராவைச் சேர்ந்த அந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் உமேஷ் குமார் திருமணமானவர் என்பது தெரியவந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, உமேஷ் குமார் சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார். அவர்கள் விவாகரத்து கோரி மனு தாக்கலும் செய்திருக்கின்றனர்.

இதற்கிடையில்,  தற்கொலை செய்து கொள்வதற்கு உமேஷ் குமாருக்கு, பெண் தோழிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, உமேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன என்பது குறித்த அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் கூட, பெங்களூருவில் ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருமண பிரச்னைகள் காரணம் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் கனிகரஹள்ளியைச் சேர்ந்த பிரசாந்த் நாயர் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். திருமணமாக 12 ஆண்டுகள் ஆன நிலையில், இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசாந்த் நாயர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)