சாலையில் செல்லும்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. அதிர்ச்சி சம்பவம்!
Uttar Pradesh Car Fire | சமீப காலமாகவே சாலையில் செல்லும் கார்கள் தீப்பிடித்து எரிவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் கார் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது தீப்பிடித்து எரிந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உத்தர பிரதேசம், ஏப்ரல் 15 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த (Car Fire Accident) நிலையில், காரில் பயணம் செய்தவர்கள் கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் கார் மலமலவென தீப்பற்றி ஏரியும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் கார் தீப்பற்றி எரியும் நிலையில், விபத்து ஏற்பட்டது எப்படி, காரில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் உள்ள ரமடான் உணவகத்தின் அருகே சென்றுக்கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அந்த காரில் சிலர் பயணம் செய்த நிலையில், அதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காரில் இருந்தவர்கள் புத்திசாலிதனமாக யோசித்து கீழே குதித்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பின்னர் காரில் இருந்து கீழே குதித்தவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
आगरा में चलती कार में शॉर्ट शर्किट से लगी आग,
कार सवार लोगों ने कूद कर बचाई जान,
आगरा इनर रिंग रोड रमाडा होटल के पास की घटना। pic.twitter.com/ngxgcKITg8— Ajit Singh Rathi (@AjitSinghRathi) April 14, 2025
அதிகரிக்கும் கார் தீ விபத்துக்கள்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சாலையில் செல்லும் கார்கள் தீப்பிடித்து எரிவது தொடர்கதையாகி வருகிறது. அதிக வெப்பம், கார்களை முறையாக பராமரிக்காதது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காரில் பயணம் செய்தவர்கள் புத்திசாலிதனமாக காரில் இருந்து கீழே குதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.