JD Vance Meet PM Modi: ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி.. குழந்தைகளுடன் கொஞ்சிய புகைப்படம் வைரல்!

US Vice President JD Vance's India Visit: அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் 2025 ஏப்ரல் 21 அன்று தனது குடும்பத்துடன் டெல்லி வந்தடைந்தார். இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் வான்ஸ் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதித்தார். குடும்பத்துடன் அக்ஷர்தாம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். விரைவில் நடைபெறவுள்ள IMF கூட்டத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

JD Vance Meet PM Modi: ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி.. குழந்தைகளுடன் கொஞ்சிய புகைப்படம் வைரல்!

ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி

Published: 

21 Apr 2025 21:16 PM

டெல்லி, ஏப்ரல் 21: அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (US Vice President JD Vance), இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று அதாவது (2025, ஏப்ரல் 21) டெல்லி வந்தடைந்தார். சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வர்த்தக போருக்கு மத்தியில் ஜே.டி வான்ஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. டெல்லி வந்தடைந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை (PM Modi) சந்தித்தார்.அப்போது, பிரதமர் மோடி முதலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடி ஜே.டி. வான்ஸின் குழந்தைகளுடன் அன்பாகவும், அக்கறையுடன் கைகோர்த்து அரவணைத்து பேசிய புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியை குடும்பத்துடன் சந்தித்த ஜே.டி.வான்ஸ்:

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை சந்தித்தார்.  கிடைக்க தகவலின்படி, இரு நாட்டு தலைவர்களும் வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர். அமெரிக்க துணை அதிபருடன் ஜே.டி.வான்ஸுடன் விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பிரதமர் மோடி இன்று அதாவது 2025 ஏப்ரல் 21ம் தேதி இரவு வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரவு விருந்து அளிக்க உள்ளார்.

IMF கூட்டத்தில் பங்கேற்பதற்காக விரைவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் செல்லவுள்ளார். இங்கு, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக நிதியமைச்சர் அங்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது.

குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற ஜே.டி.வான்ஸ்:

முன்னதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் தங்களது மூன்று குழந்தைகளான இவான், விவேக், மிராபெல்லுடன் இந்தியா வந்து இறங்கினர். உஷா வான்ஸின் மூதாதையர் வீடு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. உஷா வான்ஸின் பெற்றோர் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன், மூத்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் குழு உடன் வந்தது. டெல்லி வந்ததும் முதல் வேலையாக ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்தினருடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று 4 மணிநேரம் இருந்து தரிசனம் செய்தார். அங்கு ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மரத்தால் செதுக்கப்பட்ட யானை, அக்ஷர்தம் கோயிலின் மாதிரி மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஜே.டி. வான்ஸ் ஜன்பத்தில் உள்ள ஒரு எம்போரியத்திற்குச் சென்று மண் பானைகள் மற்றும் களிமண் பானைகளை வாங்கினார்.