Thiruvananthapuram Cannabis Bust: கஞ்சாவை மறைமுகமாக வளர்த்த மத்திய அரசு ஊழியர்.. கைது செய்து கலால் துறை நடவடிக்கை!

Central government Employee Arrested: திருவனந்தபுரத்தில் மத்திய அரசு ஊழியர் ஜதின் என்பவர் தனது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததாக கலால் துறை கண்டுபிடித்துள்ளது. அவரது வாடகை வீட்டில் 5 கஞ்சா செடிகள், விதைகள் மற்றும் புகைப்பிடித்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொழிலாளர்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Thiruvananthapuram Cannabis Bust: கஞ்சாவை மறைமுகமாக வளர்த்த மத்திய அரசு ஊழியர்.. கைது செய்து கலால் துறை நடவடிக்கை!

கைது செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்

Published: 

18 Apr 2025 16:40 PM

திருவனந்தபுரம், ஏப்ரல் 18: திருவனந்தபுரம் (Thiruvananthapuram) அருகே வீட்டில் கஞ்சா செடிகளை (Cannabis Plants) வளர்த்ததற்காக மத்திய அரசு (Central Government) ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் ஏஜிஎஸ் அலுவலக ஊழியரான ராஜஸ்தானை சேர்ந்த ஜதின் என்பவரை கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தில் ஜதின் வசித்து வந்ஹ வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகல் வளர்க்கப்பட்டனர். கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, கலால் துறையினர் நடத்திய சோதனையின்போது மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிக்கியது எப்படி..?

ஜதின் தனது வாடகை வீட்டின் முதல் தளத்தில் 5 கஞ்சா செடிகலை வளர்த்து வந்தார். அவற்றில் 4 மாதம் வயதுடைய சுமார் 56 சென்டி மீட்டர் உயரமான செடியும் அடங்கும். இந்த வீட்டில் ஜாட் என்பவருடன் பீகாரை சேர்ந்த ஒருவரும், உத்தரப்பிரதேசத்த சேர்ந்த ஒருவரும் வசித்து வந்தனர். மூவரும் மத்திய அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக சோதனை மேற்கொண்ட கலால் துறையினர் கஞ்சா விதைகள் மற்றும் கஞ்சா பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட ஜதின் வடிக்கும் அறைக்கு முன்னாள் கஞ்சா செடிகள் கண்டெடுக்கப்பட்டன. வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் தென்னை மரங்களிலிருந்து கள்ளு அறுவடை செய்யப்படுகிறது. அப்போது, தென்னை மரத்தின் உச்சியில் ஏறி அவற்றை வெட்டிய தொழிலாளர்கள் கஞ்சா செடிகளை பார்த்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வாடகை வீட்டில் மூவர் வசித்ததால் மூவரையும் கைது செய்ய கலால் துறையினர் திட்டமிட்டனர். அப்போது கஞ்சா செடிகளை நட்டது நான்தான் என்று கூறி, ஜதின் தானே பழியை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, வாடகை வீட்டில் கண்டறியப்பட்ட 5 கஞ்சா செடிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனுடன் கலால் துறையினர் அங்கிருந்து கஞ்சா விதைகளையும், கஞ்சா செடிகளை புகைப்பிடிக்க பயன்படுத்திய காகிதங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஒரு கைது:

கருநாகப்பள்ளியில் வீட்டில் கஞ்சா பயிரிட்ட இளைஞரை கலால் துறையினர் கைது செய்தனர். அயனிவெளிகுளங்கரையைச் சேர்ந்த முகமது முஹ்சின் (வயது 32), தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள படுக்கையறையில் ஒரு தொட்டியில் கஞ்சா வளர்த்ததற்காக கைது செய்யப்பட்டார்.