Viral Video: வெஜ் பிரியாணிக்கு பதிலாக கைக்கு வந்த சிக்கன் பிரியாணி.. அதிர்ந்துபோன பெண்! உரிமையாளர் கைது!
Veg Biryani Order Leads to Arrest: சாயா சர்மா என்ற பெண் கடந்த 2025 ஏப்ரல் 4ம் தேதி ஸ்விக்கி செயலி மூலம் லக்னோவி கபாப் பராத்தா உணவகத்தில் இருந்து வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி வந்ததாகவும், அது சிக்கன் பிரியாணி என்றே தெரியாமலே தான் சாப்பிட்டதாகவும் விரக்தியில் பேசினார்.

நொய்டா, ஏப்ரல் 8: உத்திரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் ஆன்லைனில் வெஜ் பிரியாணி (Veg Briyani) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி (Chicken Briyani) வந்துள்ளார். இதையறியாமல் சாப்பிட்ட அந்த பெண் ஒரு வீடியோவை வெளியிட்டு ஆன்லைன் தளமான ஸ்விக்கி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், அந்த வீடியோவில் அந்த பெண் இந்தத் தவறு தனது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்காரரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது..?
பாதிக்கப்பட்ட பெண் கிரேட்டர் நொய்டாவின் கிரெனோ வெஸ்டில் சாயா சர்மா வசிக்கிறார். இவர் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த உணவகம் அம்ரபாலி லீஷர் வேலி செக்டார்-2 இல் அமைந்துள்ளது. சாயா சர்மா என்ற பெண் கடந்த 2025 ஏப்ரல் 4ம் தேதி ஸ்விக்கி செயலி மூலம் லக்னோவி கபாப் பராத்தா உணவகத்தில் இருந்து வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி வந்ததாகவும், அது சிக்கன் பிரியாணி என்றே தெரியாமலே தான் சாப்பிட்டதாகவும் விரக்தியில் பேசினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாயா சர்மா என்ற பெண், முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க அழுதது தெளிவாகத் தெரிந்தது. அந்த வீடியோவில் பேசிய சாயா சர்மா, “நவராத்திரி பண்டிகையின்போது, லக்னோவின் கபாப் பரந்தா உணவகத்தில் இருந்து பிரபலமான உணவு விநியோக செயலியான ஸ்விக்கி மூலம் ‘வெஜ் பிரியாணி’ ஆர்டர் செய்தேன். ஆனால், எனக்கு வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி பார்சல் வந்திருந்தது. பிரியாணி சாப்பிட்டவுடனே தனக்கு சந்தேகம் வந்ததாகவும், விசாரித்தபோது எனக்கு அனுப்பப்பட்ட ‘பிரியாணி’ ‘வெஜ்’ அல்ல, ‘சிக்கன் பிரியாணி’ என்பது தெரிந்தது. இதுகுறித்து விசாரிக்கலாம் என்று எண்ணியபோது, உணவகத்தின் உரிமையாளர் உணவகத்தை மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ட்விட்டரில் புகார் அளித்த பெண்:
Chhaya Sharma from Greater Noida ordered veg biryani from Swiggy during Navratri. But she got chicken biryani.
After eating some spoons she saw the meat piece. While she is pure vegetarian.
The owner of Lucknowi Kabab Paratha restaurant is arrested.#Navratri2025 #marketcrash pic.twitter.com/LJ4lwskKvw— Barbarik (@Sunny_000S) April 7, 2025
நான் ஒரு தூய வெஜ்டேரியன். தற்செயலாக ஒன்று அல்லது இரண்டு வாய் சாப்பிட்ட பிறகுதான், அது சிக்கன் பிரியாணி என்று தெரிந்தது. இதனால் எனது மத உணர்வுகள் புண்பட்டுவிட்டது. நவராத்திரியின் போது இதுபோன்ற தவறு செய்வது கவனக்குறைவு மட்டுமல்ல, நம்பிக்கையை வேண்டுமென்றே சிதைப்பதும் கூட. இது வேண்டுமென்றே செய்யப்பட்டது. இதைச் செய்தவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார். நான் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தபோது அவர்களால் எப்படி அசைவத்தை அனுப்ப முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
உணவக உரிமையாளர் கைது:
இதையடுத்து, சாயா சர்மாவிற்கு வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி அனுப்பிய உணவக உரிமையாளர் ராகுல் ராஜ்வன்ஷி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வீடியோ வெளியான பிறகு, சம்பந்தப்பட்ட உணவக ஊழியரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருவதாக துணை காவல் ஆணையர் (டிசிபி-மத்திய நொய்டா) சக்தி மோகன் அவஸ்தி தெரிவித்தார். முன்னதாக, இதுகுறித்து விளக்கம் அளித்த ராகுல், “தனது கடையில் வெஜ் பிரியாணி சமைக்கப்படுவதில்லை. சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி மட்டுமே சமைக்கப்படுகிறது. இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து எங்கள் மட்டத்தில் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த வீடியோ வைரலான பிறகு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகக் குழுவும் உணவகத்தில் சோதனை மேற்கொண்டது. பின்பு, உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஓம்பல் சிங், உணவகத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்து, விசாரணை முடியும் வரை சீல் வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிஸ்ராக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.