Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Waqf Bill: வக்ஃப் திருத்த சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு பின்னால் எழுந்துள்ள விளைவுகளை கவலையுடன் கவனித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த சட்டத்தை இந்து அறநிலையச் சட்டத்துடன் ஒப்பீட்டுள்ளது.

Waqf Bill: வக்ஃப் திருத்த சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
உச்சநீதிமன்றம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Apr 2025 17:25 PM

வக்ஃப் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெற்ற எதிர்பாராத சம்பவங்கள் கவலையளிக்ககூடிய வகையில் அமைந்ததாகவும், அதனை உச்சநீதிமன்றம் கண்டிப்பதாகவும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். இந்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட 70க்கும் மேற்பட்ட வழக்கில் ஒருபாதி மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, வக்ஃப் திருத்த சட்டத்தில் குறிப்பிட்டப்பட்ட விஷயங்களைச் சுட்டிக்காட்டி, “ இஸ்லாமியர்களை இந்து சமய அறக்கட்டளை, வாரியங்களில் அனுமதிப்பீர்களா?” என மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வியெழுப்பினார். அதுமட்டுமல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும். ஆனால் வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை என கேள்வியெழுப்பினார். மேலும் இந்த வழக்கை 2025, ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கின்போது ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் வரை சொத்துக்களை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. அப்படியென்றால் 14, 17 ஆம் நூற்றாண்டில் தானமாக அளிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை செல்லாதது என அறிவிக்க முடியுமா? என கேட்ட உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

வக்ஃப் மசோதா சொல்வது என்ன?

வக்ஃப் என்பது நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்கள் என்று பொருளாகும். அதாவது இஸ்லாம் மதத்தின் கொண்ட நம்பிக்கையின் பெயரில் அவற்றிற்கு நன்கொடையாக அளிக்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இவற்றின் கீழ் வரும். இந்த சொத்துக்கள் ஒன்று அல்லாவின் பெயரில் நன்கொடையாக வழங்கப்படும் அல்லது சம்பந்தப்பட்டவரின் பெயரில் நன்கொடையாக வழங்கப்படும். இதில் சம்பந்தப்பட்டவரின் பெயரில் வழங்கப்படும் நன்கடை சொத்துக்களை அவரது வாரிசுகள் கவனிக்க இயலும். ஆனால் யாரும் உரிமை கோர முடியாது.

அதேசமயம் இந்த வக்ஃப் சொத்துக்களை யாருக்கும் தானமாகவோ விற்கவும் முடியாது. இந்த சொத்துக்கள் மூலமாக வரும் வருமானத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படுகிறது. இத்தகைய வக்ஃபு சொத்துக்களை நிர்விக்கவே வக்ஃப் வாரியம் அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த வக்ஃப் சொத்துக்களை முறையாக பராமரிக்க 1954 ஆம் ஆண்டு தனிச்சட்டம் கொண்டுவரப்பட்டு மாநில வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டது.

இந்த மாநில வாரியங்கள் மாவட்ட மண்டல அளவிலான கமிட்டிகளை அமைத்து சம்பந்தப்பட்ட வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க மற்றும் ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வாரியத்தில் 11 இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். நாடு முழுவதும் மாநில வாரியாக தற்போது 30 வக்ஃப் வாரியங்கள் இருக்கின்றது. 1959, 1964, 1968, 1984, 1995 ஆகிய ஆண்டுகளில் வக்ஃப் சொத்து க்களை மேம்படுத்தும் நோக்கில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

2013ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம்

தொடர்ந்து 2013 ஆம் ஆண்டும் திருத்தம் கொண்டுவரப்பட்டது அதில் ஒரு இஸ்லாமிய சட்ட நிபுணர் உட்பட 3 உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாநில வக்ஃப் வாரியத்திலும் இரண்டு பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. வக்ஃப் சொத்துக்களின் குத்தகை காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 8.72 லட்சம் அசையா சொத்துக்கள் மற்றும் 16,716 அசையும் சொத்துக்கள் வக்ஃபு வாரியத்திடம் இருக்கிறது.

வக்ஃப் திருத்த சட்டம் சொல்வது என்ன?

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் நன்கொடை வழங்குபவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் இஸ்லாம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி இஸ்லாமியராக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தீர்ப்பாயங்களில் முடிவை எதிர்த்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம்.

அரசுக்கு சொந்தமானது எனப்படும் சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துக்களை ஆய்வு செய்ய இனி மூத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் ஆறு மாத காலத்திற்குள் அதற்கான அதிகாரப்பூர்வ போர்ட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகைய சொத்துக்களை தணிக்கை செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட மத்திய அரசு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வக்ஃப் இஸ்லாமிய சட்ட நிபுணர் நீக்கப்பட்டு மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராகவும், மாநில அரசின் இருந்து இணைச் செயலாளரும் சேர்க்கப்படுபவர் என பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இனி கேஸ் தட்டுப்பாடே வராது... வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு
இனி கேஸ் தட்டுப்பாடே வராது... வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு...
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ...
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!...
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...