காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்? வெளியான வரைபடம்!
Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியாகி உள்ளது. தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் அளித்த தகவலின்பேரில் மூன்று தீவிரவாதிகளின் வரைபடம் வெளியானது. முன்னதாக, பயங்கரவாதி ஒருவரின் புகைப்படம் வெளியானது. அதில், ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பயங்கரவாதி இருப்பதை காட்டுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 23: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் (Pahalgam Terror Attack) நடந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியாகி உள்ளது. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வரைபடம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியாகி உள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீல் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயம் அடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்?
இந்த தாக்குதல் பஹல்காமில் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பகுதி மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இநத் பகுதியில் தான் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவே ஆகும். இந்த நிலையில், தற்போது பயங்கரவாதிகளைக் கண்டறிய தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரமக ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பில் உள்ள 5 முதல் 6 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பஹல்காமில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியாகி உள்ளது. மூன்று பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்களின் தகவலின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான வரைபடம்
முன்னதாக, பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது. அவர் ஏகே 47 ரக துப்பாக்கியை கையில் வைத்திருப்பதை காட்டுகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்று கூறப்படுகிறது. தற்போது பயங்கரவாதி மூன்று பேரிடன் வரைபடம் வெளியாகி உள்ளது.
எனவே, பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மேலும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில், பஹல்கான் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதோடு, தாக்குதல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.