மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு.. பீகாரில் அதிர்ச்சி!
Bihar Lightning Strike: பீகாரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகாரில் மின்னல் தாக்கிய 25 பேர் பலி
பீகார், ஏப்ரல் 11: பீகாரில் மின்னல் தாக்கி (Bihar Lightning Strike) ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சில நாட்களாகவே பலத்த மழை (Bihar Heavy Rain) பெய்து வருகிறது. பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழையால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திடீர் கனமழையால் பாட்னா உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு
கனமழையைத் தொடர்ந்து பாட்னாவின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாக தெரிகிறது. பாட்னாவில் சராசரியாக 42.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதோடு, பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோபால்கஞ்ச், சரண், முசாபர்பூர், வைஷாலி, தர்பங்கா, சமஸ்திபூர், மாதேபுரா, சஹர்சா, பூர்னியா, கதிஹார், பாகல்பூர், ககாரியா, பாங்கா, முங்கர், ஜமுய், ஷேக்புரா, பெகுசராய், பாட்னா, நாலந்தா, நவாடா, ஜெஹானாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளந்தா பகுதியில் 18 பேரும், சிவானி இரண்டு பேரும், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பீகாரில் அதிர்ச்சி
STORY | 25 killed in lightning strikes, hailstorms in several districts of Bihar
READ: https://t.co/RIWNHdDkZJ
VIDEO | Severe storm and rain in Nalanda causes devastation. pic.twitter.com/fiZxwMktF7
— Press Trust of India (@PTI_News) April 10, 2025
மேலும், பீகாரில் கனமழை தொடரும் என அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. தர்பங்கா, கிழக்கு சம்பாரண், கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரண், கிஷன்கஞ்ச், அராரியா, சுபால், கயா, சீதாமர்ஹி, ஷியோஹர், நாளந்தா, நவாடா மற்றும் பாட்னா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மழை நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து, அவசரகால மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.