Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு.. பீகாரில் அதிர்ச்சி!

Bihar Lightning Strike: பீகாரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு.. பீகாரில்  அதிர்ச்சி!
பீகாரில் மின்னல் தாக்கிய 25 பேர் பலிImage Source: Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Apr 2025 07:36 AM

பீகார், ஏப்ரல் 11: பீகாரில் மின்னல் தாக்கி (Bihar Lightning Strike) ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சில நாட்களாகவே பலத்த மழை (Bihar Heavy Rain) பெய்து வருகிறது. பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழையால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திடீர் கனமழையால் பாட்னா உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு

கனமழையைத் தொடர்ந்து பாட்னாவின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாக தெரிகிறது. பாட்னாவில் சராசரியாக 42.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.  அதோடு, பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோபால்கஞ்ச்,  சரண், முசாபர்பூர், வைஷாலி, தர்பங்கா, சமஸ்திபூர், மாதேபுரா, சஹர்சா, பூர்னியா, கதிஹார், பாகல்பூர், ககாரியா, பாங்கா, முங்கர், ஜமுய், ஷேக்புரா, பெகுசராய், பாட்னா, நாலந்தா, நவாடா, ஜெஹானாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளந்தா பகுதியில் 18 பேரும், சிவானி இரண்டு பேரும், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பீகாரில் அதிர்ச்சி

மேலும், பீகாரில் கனமழை தொடரும் என அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. தர்பங்கா, கிழக்கு சம்பாரண், கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரண், கிஷன்கஞ்ச், அராரியா, சுபால், கயா, சீதாமர்ஹி, ஷியோஹர், நாளந்தா, நவாடா மற்றும் பாட்னா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மழை நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து, அவசரகால மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...