ஹோட்டலில் பயங்கர தீ விபத்து… உடல் கருகி 14 பேர் பலி… கொல்கத்தாவில் பரபரப்பு!

Kolkata Hotel Fire Accident : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் பலரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 14 பேர்  பலி... கொல்கத்தாவில் பரபரப்பு!

ஹோட்டலில் தீ விபத்து

Updated On: 

30 Apr 2025 07:34 AM

கொல்கத்தா, ஏப்ரல் 30: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் (Kolkata Hotel Fire Accident)  14 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் பலரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்று கண்டறியப்படவில்லை. இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து

மத்திய கொல்கத்தாவின் ஃபால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஹோட்டலில் இந்த விபத்து நடந்துள்ளது. ஐந்து மாடிகட்டிடம் கொண்ட இந்த ஹோட்டலில் 2025 ஏப்ரல் 29ஆம் தேதியான நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனை அடுத்து, ஹோட்டலில் இருந்து மக்கள் அலறி துடித்து வெளியே வர முயன்றுள்ளனர்.

இருப்பினும், பலர் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மேலும், பலரும் வெளியே வர முயன்றுள்ளனர். தீ விபத்தை அறிந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் ஹோட்டலில் இருந்து மக்களை மீட்கவும் செய்தனர்.  தீயில் கருகி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் கருகி 14 பேர் பலி

 

மேலும், ஹோட்டலில் உள்ளவர்களை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் வர்மா கூறினார். மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சுபாங்கர் சர்க்காரும் கொல்கத்தா மாநகராட்சியை கடுமையாக சாடினார். “இது ஒரு துயரமான சம்பவம். தீ விபத்து ஏற்பட்டது. இன்னும் நிறைய பேர் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். பாதுகாப்பு இல்லை. மாநக ராட்சி என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும், மத்திய அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் பேசுகையில், “பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் மாநில நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களைத் தடுக்க தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Related Stories
அதிகாலையிலேயே சோகம்.. கோயிலில் சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் 8 பேர் பலி.. ஆந்திராவில் அதிர்ச்சி!
Cabinet Committee Meetings: பிரதமர் மோடி தலைமையில் 3 முக்கிய கூட்டங்கள்.. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு கூடுகிறது அமைச்சரவை..!
Pahalgam Terror Attack: இந்திய ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம்.. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
Pahalgam Terror Attack: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தீவிர ஆலோசனை!
பஹல்காம் தாக்குதல்… காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி!
பன்னீர் தர மாட்டீங்களா? களேபரமான திருமண மண்டபம்.. இளைஞர் செய்த அட்ராசிட்டி!