இனி டோல்கேட்டில் நிற்காமல் செல்லலாம்.. 15 நாட்களுக்குள் வரவுள்ள அசத்தல் அம்சம்!
Satellite-Based Toll Collection Launching in India | இந்தியாவில் தற்போது ஃபாஸ்ட்டேக் முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், விரைவில் சாட்டிலைட் உதவியுட்ன் கூடிய சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வர உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 15 : இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் (Toll Gate) இன்னும் 15 நாட்களுக்குள் சாட்டிலைட் (Satellite) அம்சத்துடன் கூடிய கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வர உள்ளதாக நேற்று (ஏப்ரல் 14, 2025) மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் (Union Transport Minister) நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த புதிய அம்சத்தின் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் வரவுள்ள இந்த புதிய அம்சம் என்ன, அதன் மூலம வரப்போகும் முக்கிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த சுங்கச்சாவடி முறை அமலில் உள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் சுங்குச்சாவடி முறை கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முக்கிய எல்லைகளாக கருதப்படும் பகுதிகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அந்த வழியாக கடந்து செல்லும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகள் அறிமுகம் செய்யப்பட்ட காலக்கட்டத்தில் பணத்தை கொடுத்து சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
இதன் காரணமாக வாகனங்கள் வெகு நேரம் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டி நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தை குறைக்கும் வகையில் தான் ஃபாஸ்டேக் (Fastag) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தற்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் 2 முதல் 3 விநாடிகள் மட்டுமே நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் எந்த வித இடையூறும் இன்றி செல்ல முடிகிறது. தற்போது இந்த அம்சத்தையே நவீனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் காரணமாக தான் இந்த சாட்டிலைட் முறை அமலுக்கு வர உள்ளது.
இனி டோல்கேட்டில் நிற்காமல் செல்லலாம்
How Does GNSS Work?
Ever wonder how your car knows where it is?Satellites send signals➡️ your GNSS receiver picks up 4+ signals➡️ calculates your exact location!
💡 In Toll Collection:
✅ Real-time tracking
✅ Auto toll deduction
✅ Virtual toll zones = no stopping!#GNSS pic.twitter.com/dQms5HBnic— Akhilesh Srivastava – Global Technology Leader (@akhilesh_gtl) April 14, 2025
விரைவில் வரப்போகும் சாட்டிலைட் முறை – என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும்
இந்தியாவில் தற்போது ஃபாஸ்டாக் முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 15 நாட்களுக்குள் சாட்டிலைட் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. வாகனன்ங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் கடந்து செல்லலாம். வாகங்கள் கடந்து செல்ல சாட்டிலைட் மூலம் சுங்க கட்டணம் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.