தாக்குதலின் பிண்ணனியில் உள்ள நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும்.. காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி!

Rahul Gandhi Visits Pahalgam | ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்ரனர். இந்த நிலையில், அவர்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

தாக்குதலின் பிண்ணனியில் உள்ள நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும்.. காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி!

காயமடைந்தவர்களை சந்தித்த ராகுல்

Updated On: 

25 Apr 2025 20:20 PM

ஜம்மு & காஷ்மீர், ஏப்ரல் 25 : பஹல்காம் (Pahalgam) தாக்குதலின் பிண்ணனியில் உள்ள நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்துவதும், சகோதரனை சகோதரனுக்கு எதிராக நிறுத்துவதும் ஆகும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி (Opposition Party Leader Rahul Gandhi) தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று (ஏப்ரல் 25, 2025) ஜம்மு & காஷ்மீர் (Jammu and Kashmir) சென்ற ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், காயமடைந்தவர்களை சந்தித்த பின் ராகுல் காந்தி கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜம்மு & காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2022 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில், இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரெண்ட் (The Resistance Front) பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை இந்திய அரசு மிக தீவிரமாக தேடி வருகிறது.

இதற்கு இடையே பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பதட்டமான சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த ஆறுதல் கூறுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றார். அதன்படி, காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஜம்மு & காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி

பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய ராகுல்

இது குறித்து செயலாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஒரு பயங்கரமான சோகம். நிலைமையை புரிந்து கொண்டு உதவுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களும் இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்து நாட்டை முழுமையாக ஆதரித்துள்ளனர். தொடர்ந்து பேசிய அவர், தாக்குதலின் பிண்ணனியில் உள்ள நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்துவதும், சகோதரனை சகோதரனுக்கு எதிராக நிறுத்துவதும் ஆகும். இதுபோன்ற நேரங்களில் ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றாக நிற்பது அவசியம் என்று கூறியுள்ளார்.