Pope Francis : போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
India Observes 3 Days of Mourning | கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், நேற்று (ஏப்ரல் 21, 2025) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 22 : போப் பிரான்சிஸ் மறைவை (Pope Francis Demise) ஒட்டி இந்தியாவில் மூன்று நாட்கள் துக்கம் (3 Days Mourning in India) அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக போப் பிரான்சஸ் இருந்த நிலையில் அவரின் மறைவின் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உடல்நல குறைவால் காலமானா போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதலில் வத்திகானில் (Vatican) காலமானார். அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 21, 2025) காலை காலமானதாக வத்திகான் அறிவித்தது. போப் பிரான்சிஸ் 2012 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, அவர் கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தந்தை ஆக பொறுப்பு வகித்து வந்தார்.
சுமார் 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்த போப் பிரான்சிஸ், தொடர்ந்து உலக அமைதியை வலியுறித்தி வந்தார். போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி வத்திகானில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் உள்ள கர்தினால்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்படும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் மறைவை அறிவித்த வத்திக்கான்
Pope Francis died on Easter Monday, April 21, 2025, at the age of 88 at his residence in the Vatican’s Casa Santa Marta. pic.twitter.com/jUIkbplVi2
— Vatican News (@VaticanNews) April 21, 2025
இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
போப் பிரான்சிஸ் உலக அளாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதப்படும் நிலையில், அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்றும், எந்த வித அரசு நிகழ்வுகளும், கொண்டாடட்டங்களும் நடைபெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகத்திலும் இன்றும் (ஏப்ரல் 22, 2025), நாளையும் (ஏப்ரல் 23, 2025) துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பொது வெளிகளில், தேவாலயங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.