வேலைவாய்ப்பு முகாம் மூலம் 51,000 பேருக்கு வேலை – நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி
PM Modi distributes job Offer: இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலை கிடைத்த 51,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். வங்கிகள், ரயில்வே போன்ற பல முக்கிய துறைகளில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியம் என்றும், வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் ரோஜ்கர் மேளா (Rozgar Mela) என்ற வேலைவாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானார் நிரந்தர வேலையில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 14 வது வேலைவாய்ப்பு முகாமில் 71, 000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதனையடுத்து 15வது வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 26, 2025 அன்று நடைபெற்றது. வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) காணொளி மூலம் பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது பேசிய அவர், வேலைவாய்ப்புகள் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசின் தொலைநோக்கு பார்வையுடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2022, அக்டோபர் 22 ஆம் தேதி இந்த திட்டம் துவங்கப்பட்ட போது 75000 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வேலை தேடுபவர்களுக்கும் அரசு துறைகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பணி நியமன ஆணையை வழங்கிய பிரதமர் மோடி
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi distributes more than 51,000 appointment letters to newly appointed youth in various Government departments and organisations
(Source: DD) pic.twitter.com/ymXhH4MZz8
— ANI (@ANI) April 26, 2025
இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், மொரிஷியஸ், யுனைட்டட் கிங்டம், மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுடன் வேலைவாய்ப்பு ஓப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் 15 வது வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 26, 2025 சனிக்கிழமை நடைபெற்றது. நாடடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு அரசுத் துறைகளில் 51000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த நிலையில் வேலைவாய்ப்பு பெறப்பட்ட 51, 000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பணி நியமனக் கடிதத்தை வழங்கினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை வழங்கவும் நாட்டின் முன்னேற்றத்தில் அவர்கள் திறம்பட பங்களிக்க உதவுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் வருவாய்த்துறை பணியாளர் மற்றும் குறை தீர்ப்பு , ஓய்வூதிய அலுவலகங்கள், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, ரயில்வே அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளில் சேரவுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், வேலைவாய்ப்புகளையும் சுயதொழில் வாய்ப்புகளையும் தொடர்ச்சியாக அதிகரிக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இந்தியா விரைவில் உலகின் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும். ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மிகுந்த வளர்ச்சியடைந்து, வேலைவாய்ப்புகளை பெரிதும் உருவாக்கியுள்ளது.
அத்துடன், பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் யு.பி.எஸ்.சி தேர்வில் முதல் ஐந்து இடங்களில் மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 10 கோடிக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களில் செயல்பட்டு வருகிறார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.