Pawan Kalyan: உயிர்பிழைத்த மகன்.. திருப்பதியில் மொட்டையடித்த பவன் கல்யாணின் மனைவி!

Anna lezhneva : பவன் கல்யாண் மற்றும் அன்னா லெஷ்னேவா தங்களின் மகன் மார்க் சங்கர் தீ விபத்தில் சிக்கியதிலிருந்து உயிர் தப்பியதற்கு நன்றி செலுத்தும் விதமாக, அன்னா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தலைமுடியை மொட்டையடித்து காணிக்கை செலுத்தினார். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மகனின் உயிரைக் காப்பாற்றியதற்கான நன்றியின் வெளிப்பாடாகத் தலைமுடியைக் காணிக்கையாகக் கொடுத்துள்ளார்.

Pawan Kalyan: உயிர்பிழைத்த மகன்.. திருப்பதியில் மொட்டையடித்த பவன் கல்யாணின் மனைவி!

பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா

Published: 

14 Apr 2025 18:08 PM

திருப்பதி: ஆந்திர துணை முதல்வரும் (Andhra Pradesh Deputy Chief Minister) , நடிகருமான பவன் கல்யாணின் (Pawan Kalyan)  மனைவி அன்னா லெஷ்னேவா (Anna lezhneva) , திருப்பதியில் (Tirupati) உள்ள திருமலை கோயிலுக்குச் சென்று தலைமுடியை மொட்டையடித்து காணிக்கை (Hair offering)  செலுத்தியுள்ளார். சமீபத்தில், பவன் கல்யாண் மற்றும் அன்னா லெஷ்னேவாவின் மகன், மார்க் சங்கர் தீ விபத்தில் சிக்கியதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அந்த விபத்திலிருந்து பெரிதாக எந்தவித காயங்களும் இன்றி அவர்களின் மகன் உயிர் தப்பியதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த செய்திகள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் நடிகர் பவன் கல்யாண் சிங்கப்பூரில் படித்துக்கொண்டிருந்த தனது மகனைப் பார்க்கச் சென்றிருந்தார்.

அவரது மகன் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகு, அவரது தாயார் அன்னா லெஷ்னேவா திருப்பதிக்குச் சென்று தலையை மொட்டையடித்துக் கொண்டார். தற்போது அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது குழந்தைக்காகத் தாய் செய்யும் அசாதாரணமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.

இணையத்தில் வைரலாகும் பவன் கல்யாணின் மனைவி அனாவின் வீடியோ :

தனது மகனின் உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா திருப்பதியில் மொட்டையடித்துள்ளார். தனது தலைமுடியை ஏழுமலையானுக்குக் காணிக்கையாகச் செலுத்திய அன்னா லெஷ்னேவா, அனைத்து சடங்குகளையும் பின்பற்றி தலையில் மொட்டையடித்ததாகத் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிறு காயங்களுடன் தப்பினார். இதன் மூலம், பவனின் மனைவி அனா கொனிதேலா தரிசனம் செய்யத் திருமலைக்குச் சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். இன்று 2025, ஏப்ரல் 14ம் தேதி, திங்கட்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனம் செய்துள்ளார். பின் தனது முடி காணிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்குச் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.