பயங்கர தீ விபத்து.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் படுகாயம்.. என்னாச்சு?

Pawan Kalyan Son Mark Shankar : சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் படுகாயம் அடைந்தார். மார்க் சங்கரின் கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாக ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது.

பயங்கர  தீ விபத்து.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் படுகாயம்.. என்னாச்சு?

பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர்

Updated On: 

08 Apr 2025 10:25 AM

சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் (Pawan Kalyan Son) மார்க் சங்கர் படுகாயம் (Mark Shankar) அடைந்தார். மார்க் சங்கரின் கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், நுரையீரலுக்குள் புகை புகுந்ததால் கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் தற்போது சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பவன் கல்யாண் சிங்கப்பூருக்கு விரைகிறார். இதனை ஜனசேனா கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

பவன் கல்யாண் மகன் படுகாயம்

ஆந்திர துணை முதல்வராக இருப்பவர் பவன் கல்யாண். இவரது இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், பவன் கல்யாண் மகன் சிங்கப்பூரில் படிக்கும் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறார்.

இந்த விபத்தில் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் படுகாயம் அடைந்துள்ளார். இதில் மார்க் சங்கருக்கு கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மார்க் சங்கரின் நுரையீரலும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பவன் கல்யாண் தற்போது அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவரது மகன் தீ விபத்தில் படுகாயம் அடைந்துள்ளதாக அவருக்கு தகவல் அறிந்துள்ளார். இதனால், கட்சி தலைவர்கள் பயணத்தை நிறுத்திவிட்டு சிங்கப்பூர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

என்னாச்சு?

குரிடி கிராமத்தின் பழங்குடியினரை சந்திப்பதாக பவன் கல்யாண் கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் சந்தித்துவிட்டு, வளர்ச்சி திட்டங்களை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் புறப்படுவதாக பவன் கல்யாண் திட்டமிட்டிருக்கிறார்.

இருப்பினும், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சிங்கப்பூர் செல்ல வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அல்லூரி மாவட்டத்தில் உள்ள மக்களை பார்வையிட்ட பிறகு, பவன் கல்யாண் சிங்கப்பூர் புறப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் பவன் கல்யாண் சிங்கப்பூர் புறப்படுவதாக தெரிகிறது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா லெஷ்னேவாவுக்கு பிறந்தவர் மார்க் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.